English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fugleman
n. பயிற்சி இயக்குநர், படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர், இயக்குநர், முதல்வர், கருத்துரைப் பேராளர், அமைப்பாளர்.
fugue
n. பலவோசை உருப்படி, இடமாற்றத்துடன் ஏற்படும் நினைவிழப்பு, (வினை) பலவோசைப்பாடல் இயற்று அல்லது பாடு.
fulcra
n. (தாவ.) துணையுறுப்புக்கள், தளிரிழைகள் புடைச்செதிள்கள் போன்ற துணைவளர்ச்சிகள்.
fulcrum
n. மிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
fulfil
v. நிறைவேற்று, நிறைபுபடுத்து, தீர்வுசெய், தீர்த்துவை, செய்துமுடி, செயற்படுத்து, விதிகள் கட்டுப்பாடுகள் வகையில் முற்றிலும் இசைவுறச்செயலாற்று, முடிவுக்குக் கொண்டு வா, நிறைவு செய்.
fulfilment
n. நிறைவேற்றம், நிறைவான முழுவினைமுறை, செயல்முடிவு, செயல் தீர்வு.
fulgent
a. (செய்.) ஒளிமிக்க, சுடரிடுகிற.
fulgural
a. மின்னல் சார்ந்த.
fulguration
n. மின்னிடும் ஒளி வீச்சு, மாற்றுத்தெரிவில் திடீசென்று முடிவில் தோன்றும் ஒளி.
fulgurite
n. மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை, மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய், வெடிப்பொருள்.
fulham
n. (வர.) மூலைகளில் வலுவாக்கப்பட்ட பகடைக்காய்.
fulham Palace
n. லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி.
fuliginous
a. புகைக்கரி படிந்த, கருநிற, மங்கலான.
full
-1 n. முழுமை, உச்சபடி நிலை, நிறை அளவு, (பெ.) நிரம்பிய, நிறைந்த, செறிவுற்று நெருங்கிய, வளமான, நிரம்பப்பெற்ற, முழுமையான, பிரிவுறாத, குறையாத, முழுஅளவான, முழுநிறைவான, குறைவற்ற, யாவருமடங்கிய, யாவும் அடங்கிய, பேரளவு உட்கொண்ட, பெரும்பான்மை அடங்கிய, பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய, சுருக்கப்படாத, விளக்கமான, உருண்டு திரண்ட, புடைபரந்து முளைத்த, விம்மிதமான, பொங்கியெழுந்த, பொங்கிற்ததும்பிய, உணர்ச்சிகனிந்த, ஊக்கம் ததும்பிய, முழுதும் ஆழ்ந்தீடுபட்ட, விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த, ஏராளமான, போதிய, தேவைக்கு மேற்பட்ட, முழுதும் பொருத்தமான, மனநிறைவு ஊட்டத்தக்க, கலப்பற்ற, தூய, முழக்கமான, உச்சநிலையான, இயல்பு முற்றிய, (வினை) நிரப்பு, திரட்டு, (வினையடை) நிரம்ப, குறைவற, கணக்காக, சரியாக, குறி தவறாமல், போதிய அளவில், தாராளமாக.
full-back
n. கால்பந்தாட்டத்தில் இலக்கெல்லையிலுள்ள பின்புற ஆட்டக்காரர்.
full-blast
n. முழுச்செயற்பாடு, (வினையடை) உச்ச அளவு ஆற்றலோடும் விரைவோடும்.
full-blooded
a. இனக் கலப்பற்ற, ஊக்கமுள்ள, மனமார்ந்த, புலனுணர்ச்சி இன்பங்களில் அவா மிகுந்த.
full-blown
a. முழுதலர்ந்த, முற்றிலும் பெருக்க முற்ற.
full-bodied
a. திட்பமான, பொருட்செறிவான, குணம் நிறைந்த.
full-bottomed
a. பொய் மயிர்க்குல்லாய் வகையில் பின்னால் நீண்டு தொங்குகிற.