English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fro
adv. மீண்டும், திரும்பியும்.
frock
n. அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு, வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி, தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை, முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை, படைவீரரின் நீண்ட மேற்சட்டை, தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி, நீண்ட மேலங்கியணிந்தவர், மடத்துத் துறவி, உட்சட்டை, (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
frock-coat
n. முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவரின் நீண்ட மேற்சட்டை, படைவீரரின் நிண்ட மேற்சட்டை.
Froebelism
n. விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட இளஞ் சிறுவர்க்குரிய கல்விப் பயிற்சிமுறை.
frog
-1 n. தவளை, தொண்டைவீக்கம்.
frog-eater
n. பிரஞ்சுக்காரர்.
frog-in-the-throat
n. கரகரப்பான குரல், கம்மிய குரல்.
frog-march, frogs march
n. தவளைபோன்ற நிலையில் கைதியை முகம் கீழாகக் கைகால்களை நான்குபேர் பிடித்துக் கொண்டு செல்லுதல்.
frog-spawn
n. தவளை முட்டை, நன்னீர்ப்பாசி வகை.
frogman
n. போரில் எதிரியின் கப்பல்களுக்கெதிராக அடி நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
frolic
n. சிறு துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம், கும்மாளம், குறும்பு, களியாட்டக்குழாம், (வினை) துள்ளி விளையாடு, குதித்தாடு, களிகிளர்ச்சிக்கொள், களித்தாடு, கேலிக்கூத்தாடு, குறும்புசெய், குறும்பாட்டமாடு.
from
prep. இருந்து, இடத்திலிருந்து, முதலாக, தொடங்கி, விட்டு, விலகி, புறப்பட்டு, வெளியே, மாறாக, வேறுபட, இருந்துகொண்டு, மூலமாகக்கொண்டு, முன்மாதிரியாகக் கொண்டு, காரணமாக, ஆதாரமாகக் கொண்டு.
From background
படிவப் பின்புலம்
from bank to bank
நிலக்கரிசன் சுரங்க வேலையாள் சுரங்கக் குழிக்குள் இறங்கி முடிவில் கரையேறும் வரையில்.
frond
n. செடியுயிரினங்களில் இலைபோன்ற உறுப்பு, காய்க்கும் திறமுடைய இலைபோன்ற உறுப்பு, ஓலை, சூரல்-ஒற்றைத் தடி மரங்களின் இலை.
frondage
n. இலைபோன்ற உறுப்புத்தொகுதி, ஓலைத்தொகுதி.
Fronde
n. பிரான்சு நாட்டில் பதினான்காவது லுயி அரசன் இளமைக்காலத்திய எதிர்க்கட்சியின் பெயர், கிளர்ச்சிக்குழு, தீவிர அரசியல் எதிர்ப்பு.
front
n. முன்புறம், முன்பகுதி, முகப்பு, கட்டிட முகப்புத்தோற்றம், காட்சிக்குரிய பக்கம், முன்னிணைப்புக் கட்டுமானம், தலைவாயில், முனங்கு, நோக்கும் திசை, நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு, முன்னேறிய பகுதி, படை முன்னனி, போர்முனை, இணையணி, முற்போக்கு அணி, செயல்துறை, துறை அரங்கம், முகம், நெற்றி, நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள், பொய்ம்மயிர்க்கற்றை, உள்ளுடுப்பின் மார்புப்பகுதி, மார்புப்போலி உள்ளுடைப்பகுதி, வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம, நாவிடைப்பகுதி, (பெ.) முன்பகுதியிலுள்ள, முகப்பருகிலுள்ள, முன்புறத்தில் அமைந்த, முற்பகுதிசார்ந்த, (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற, (வினை) முகநோக்கியிரு, திசைநோக்கியமை, திசையில் முகப்புடையதாயிரு, திசைநோக்கித் திருப்பு, பக்கமாகத்திருப்பு, எதிர்த்து நில், எதிர்ப்படு, கண்ணுறு, சந்தி முகப்பளி, முன்புறம் பதித்துவை, முகப்பமை, முக்பபாயமை, முகப்பில் அமைவுறு, நாவிடை ஒலியாமை.
frontage
n. முகப்புத்தளம், தெருமுகப்பு, பாதைமுகப்பு, நீரெல்லைமுகப்பு, முகப்புஅளவு, கட்டிட முகப்பு, படையணி வகுப்பிடம், பாசறை நிலம், பாதுகாப்பற்ற பக்கம், திறந்த முகப்பு.