English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fricative
n. உராய்வொலி, உராய்வு மெய்யெழுத்து, நெருக்கமான சந்துவழியாக மூச்சின் அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் மெய்யெழுத்து, (பெ.) உராய்வதால் உண்டாகிற.
friction
n. தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.
friction-ball
n. சக்கர உராய்தலைக் குறைக்கும் உட்கோளத்திரளமைப்பு.
fried, v. fry
-2 என்பதன் இறந்தகாலம்.
friend
n. நண்பர், அன்பர், துணைவர், ஒருதுறைத் தோழர், பழக்கமிகுந்தவர், நலஞ்செய்பவர், செல்வாக்கு ஆதரவு தருபவர், உற்றுழி உதவுபவர், நல்லெண்ணமுடையவர், நண்பர்கழக உறுப்பினர், மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர், பின்பற்றுவோர், கட்சியாளர், சார்வாளர், எதிரியல்லாதவர், எதிர்க்கட்சியல்லாதவர், நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
friendly
n. நட்புரிமையுடைய பழங்குடியினர், (பெ.) நட்புரிமையுடைய, நண்பராகச் செயலாற்றுகிற, நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய, நண்பருக்குகந்த, அன்பு காட்டுகிற, ஆர்வம் வெளிப்படுத்துகிற, அன்பினால் தூண்டப்பட்ட, பகைமையற்ற, நேசமான, அன்புக்கனிவான, சார்வாதரவாக, ஏற்குமார்வமுள்ள, உதவும் ஆர்வமுள்ள, பயனளிக்கக்கூடிய, வாய்ப்பான, கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய, உற்றுழி உதவுகிற.
friends
n. pl. அணுக்க உறவினர், பொறுப்பான உறவினர்.
friendship
n. நட்பு, நண்பராயிருக்கும் நிலை, நட்புறவு, அற்புச் செயல், அன்பான இயல்பு, தோழமை.
Friesian
n. ஆலந்து நாட்டிலுள்ள பிரீஸ்லாந்து பகுதிக்குரிய கால்நடை வகை, பிரீஸ்லாந்து நாட்டுக் கால் நடைகளில் ஒன்று, (பெ.) பிரீஸ்லாந்து நாட்டுக் கால்நடையைச் சார்ந்த.
frieze
-1 n. ஒருபக்கத்தில் மட்டும் மழமழப்பாக இடையிழை கத்தரிக்கப்பட்ட சொரசொரப்பான கம்பளித்துணி வகை.
frigate
n. ஒருவரிசைப் பீரங்கியுடைய நேர்த்தளப் போர்க் கப்பல், சிறுபோர்வேவுக்கலம், சிறு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல், 2க்ஷ் முதல் 60 பீரங்கிகள் வரையுள்ள முற்காலப் போர்க்கப்பல் வகை, வேகப் போர்க்கப்பல் வகை, வெப்ப மண்டலப் பெரும் பறவை வகை.
fright
n. திகில், கிலி, திடீரச்சம், பேரச்சம், இயல்பு மீறிய கோர உருவினர், (வினை) (செய்.) அச்சுறுத்து, திகிலுண்டாக்கு.
frighten
v. அச்சுறுத்து, திகிலடையச்செய், கிலியுண்டாக்கு, அச்சுறுத்தித் துரத்து, வழக்கமாக அச்சமடையச் செய்.
frightful
a. அச்சம் தருகிற, அச்சுறுத்துகின்ற, கிலியூட்டுகிற, பெருந்திகில் உண்டாக்குகிற, திடுக்கிடச் செய்கிற, வெறுப்பான, அருவருக்கத்தக்க, அழகில்லாத, கோரமான.
frigid
a. கடுங்குளிரான, தணுப்புமிக்க, குளிரால் உறைந்த, விறைப்பான, ஆர்வமற்ற, உணர்ச்சியுள்ள, அசட்டை மனப்பான்மையுடைய, கற்பனையற்ற, உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத, மரபு வரம்புக்குட்பட்ட, வினைமுறைச் சட்டப்படி நடக்கிற, இயல்பான கனிவு இல்லாத, கவர்ச்சியற்ற, உவர்ப்பான, சப்பென்ற, பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
frigidaire
n. குளிர்சேமப் பேழை.
frigidardium
n. பண்டை ரோமாபுரியினரின் குளிர்நீர்க் குளிப்பு வாய்ப்புடைய குளிர்காப்புக்கூடம், குளிர்காப்பறை, தணிப்பு நிலையில் வைத்துப் பேணப்படும் அறை.
frigidity
n. உறைகுளிர், மந்தகுணம், கிளர்ச்சியின்மை.
frill
n. தொங்கலிழை, ஓரப்பின்னற் குஞ்சம், தாள்புணைபூவிழை, மயிர்முடியின் நுனி, இறகுநுனி, செடிகளின் நுனியிழைக்கொத்து, உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி, நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு, (வினை) ஓரத்தொங்கல் அமை, குஞ்சம் பின்னு, நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.