English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fresh
n. ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம், நாளின் கிளர்ச்சி தரும்வேளை, வெள்ளம், புதுப்புனல், (பெ.) புதிய, புதுமை குன்றாத, வாடாத, புதுமலர்ச்சி வாய்ந்த, மங்காத, புதுப்பகட்டான, நன்னிலையிலுள்ள, கெடாத, ஊசாத, சோர்வற்ற, இளமை நலமுடைய, வாட்டமுறாத, உடல்நலம் குன்றாத, ஊக்கம் குன்றாத, புதுக்கிளர்ச்சி வாய்ந்த, பயன்படுத்தப்படாத, கைபடாத, கலப்பற்ற, தூய, மாசுபடாத, துப்புரவான, நீர்வகையில் குடிக்கத்தக்க, பழுதுபடாத, பழகிவிடாத, நாட்படாத, புதிதாகச் செயல் தீர்ந்த, தகுதிகெடாத, கிளர்ச்சியூட்டுகிற, சோர்வகற்றுகிற, சில்லென்ற, அயர்ச்சி போக்குகிற, ஊக்கம் கெடாத, முன் உணரப்படாத, பழகாத, அறியப்படாத, புத்தம்புதிய, மீண்டும் புதுத்தொடக்கமான, புதுநிலையான, சமைக்கப்படாத, பக்குவப்படுத்தப்படாத, பதனிட்டதல்லாத, பச்சைநிலையில உள்ள, முதிராத, அனுபவமற்ற, பழக்கமற்ற, செயல் முனைப்பான, துடுக்குத்தனமிக்க, காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள, நாணங்கெட்ட.
fresh-blown
a. அன்றலர்ந்த, புதிதாக மலர்ந்த.
fresh-run
a. ஆற்றின் தலைமுதலிற் சென்று முட்டையிடும் இயல்புடைய மீன்வகையில் புதிதாகக் கடலிலிருந்து வந்த.
fresh-water
a. நன்னீர் சார்ந்த, உப்பற்ற நீர் சார்ந்த, நன்னீர்ப் பரப்பில் செல்லும் பழக்கமுடைய, பக்குவப்படாத, அனுபவமற்ற.
freshen
v. புதிதாக்கு, உவர்ப்பை நீக்கு, புதுவளர்ச்சி பெறு.
fresher
n. பல்கலைக்கழக முதல் ஆண்டு மாணவர்.
freshet
n. புதுப்புனல் வெள்ளம், புதுநீர்ப் பெருக்கு, நன்னீர் ஓடை, கடலினுள் நன்னீர் ஒழுக்கு.
freshly
adv. புதிதாக, மீண்டும் தொடக்க முதலாக, புத்தம் புதிய நிலையில்.
freshman
n. பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு மாணவர், புதிதாக வந்தவர்.
fret
-1 n. பின்னற் பூவேலை, அரிவரிச் சித்திர வேலைப்பாடு, நேர்வரைச் செங்கோணத் தொடர்புக்கோலமான அறுப்பு வேலைப்பாடு, (வினை) பின்னற் பூவேலை ஒப்பனை செய், குறுக்கு நெடுக்கு வரைகளாற் பல்வண்ணப்படுத்து, மச்சின் அடிப்பகுதியை உள் அறப்பு அல்லது புடையறுப்பு வேலையால் அணிசெய்.
fretful
a. சிடுசடுப்பான, வெடுவெடுப்பான.
fretsaw
n. சித்திர அறுப்பு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்.
fretwork
n. சித்திர அறுப்புவேலை, வலைப்பின்னல் வேலை, மரத்தில் ஊடறுத்துச் செய்யப்பட்ட சித்திர வேலைப்பாடு.
Freudian
n. சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் உளப்பாங்காராய்ச்சிக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்.
friable
a. எளிதில் தகர்ந்து விழக்கூடிய.
friar
n. சமயத்தொண்டிலீடுபட்ட மடத்துத் துறவி.
fribble
n. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், (வினை) சிறு பிள்ளைத்தனமாக நட, விளையாட்டுத் தனமாயிரு.
fricandeau
n. பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட குழம்போடு கூடிய இறைச்சித்துண்டு, கன்றின் இறைச்சி, (வினை) பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளாக்கு.
fricassee
n. பறவையின் அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்டுப் பொரித்த இறைச்சி, (வினை) அரிந்து பொரித்த இறைச்சியாக்கு.