English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
freebooter
n. கடற் கொள்ளைக்காரர், கடலில் வழிப்பறி செய்பவர்.
freeborn
a. சுதந்திரமாகப் பிறந்த, அடிமையாகப் பிறக்காத, குடியுரிமையையும் தனித்தற்சார்பு உரிமையையும் இயல்பான மரபுரிமையாகப் பெற்ற.
freedman
n. விடுதலையளிக்கப்பட்ட அடிமை.
freedom
n. தன்னுரிமை, சுதந்திரம், தன்னாட்சியுரிமை, குடியாட்சியுரிமை, குடியாண்மை, திணையாட்சியுரிமை, தனிமுறை ஆட்சியுரிமை, உறுப்பினர் உரிமை, வழக்காற்றுரிமை, பயனுரிமை, தனி விலக்குரிமை, தற்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பின்மை, கட்டாய நிலையின்மை, தடையற்ற பழக்க உரிமை, அஞ்சாமை, பேச்சில் ஒளிவு மறைவு தவிர்ப்பு, சிந்தனைத துணிவு, தடையற்ற இயக்கம், சிக்கற்ற செயலிழைவுத் தன்மை, தவிர்ப்புநிலை, சார்பின்மை, தொடர்பின்மை, சிக்கலின்மை, இணைவின்மை, சார்பறவு, தொடர்பறவு.
freehold
n. இறையிலி நிலம்.
freeholder
n. இறையிலி மானியத்தார்.
freelance
n. கடடுப்பாடற்ற போர்வீரர், கட்டற்றவர், எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர், சார்பற்ற அரசியல் வாதி, பணிமுதல்வரற்ற தன்னிச்சையான தொழிலாளி.
freely
adv. கடடின்றி தன்னுரிமையாக, தாராளமாக, இலவசமாக, (கப்.) காற்றுப்பக்கமாகப் பாய்களை மிகுதியாய் இழுக்காமல்.
freeman
n. கட்டற்ற சுதந்திர மனிதர், அடிமை வாழ்வற்றவர், குடியுரிமையுள்ளவர், கழகத் தனியுரிமை உறுப்பினர், நகரத் தனியுரிமை உறுப்பினர்.
freemartin
n. முதிராப் பெண்மை உறுப்புடைய ஆண்கன்று, சேங்கன்றுடன் இரட்டையாகப் பிறந்து புறப்பெண்மைமயுறுப்புடன் முனைப்பான ஆண் கூறுடைய பெண் விலங்கு.
freemason
n. மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழகத்தின் உறுப்பினர்.
freemasonry
n. மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு, கூட்டுரிமைக் கழக நிறுவனம், ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு.
freeminded
a. கவலையற்ற மனமுடைய.
freesia
n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள பகட்டான மலர்களையும் குமிழ் வடிவான தண்டையுமுடைய செடிவகை.
freestone
n. மாக்கல், பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல்வகை, (பெ.) உள்ளீடு எளிதில் பிரியும் இயல்புள்ள கொட்டையுடைய.
freethinker
n. கட்டற்ற பகுத்தறிவாளர், சமய மூட நம்பிக்கைச் சார்புகளற்ற தற்சிந்தனையாளர்.
freeze
n. பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம், பணி உறைபருவ வருகை, கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு, (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய், உறை, பனிக்கட்டியாகு, பனிக்கட்டியால் மூடப்பெறு, பனிக்கட்டியாக மாறு, குளிரால் இறுகச்செய், குளிரால் இறுகு, குளிரால் விறைப்பாகு, பனிக்கட்டியால் இறுகு, உறைதட்ப நிலையிலிரு, அச்சத்தால் நடுக்குறுத்து, ஊக்கங்கெடச் செய், கிளர்ச்சி ஒடுக்கு, செயலறச்செய், இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை, விலையை ஒருநிலைப்படுத்து, ஊதியத்தை நிலவரப்படுத்து.
freeze-out
n. முதலிழந்த உடனே ஒவ்வொரு ஆட்டக்காரராக விலகிவிடும் சீட்டாட்ட வகை.
freezer
n. உறையவகும் துணைக்கருவித்தொகுதி, உறையும் பொருள்.
freezing
a. மிகு குளிரான, ஊக்கம் கெடுக்கிற, ஆர்வக் குறைவான, நெருங்கிப்பழகாத, விலகிநடக்கிற.