English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
foreign
a. அயல்நாட்டுக்குரிய, அன்னியமான, வெளிநாட்டுச் சார்பான, உள்நாடு சாராத, வேற்றுநாட்டவரவான, தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள, வேற்று மாவட்டத்துக்குரிய, வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய, இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான, புறம்பான, உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள, சமுதாயத்துக்குப் புறம்பான, வெளியிலிருந்து வருகிற, வேறுபட்ட, ஒவ்வாத, இசையாத, அயலான, இனப்பண்பு சாராத, பண்பு ஒவ்வாத, சூழலொவ்வாத.
foreigner
n. அயல்நாட்டார், வெளிநாட்டிற் பிறந்தவர், பிறநாட்டுமொழி பேசுபவர், அயல்நாட்டுக் கப்பல், வெளிநாட்டு வரவான உயிரினம், வெளிநாட்டுச் சரக்கு.
forejudge
v. சான்றுகளை ஆராய்வதற்கு முன்பே தீர்ப்பளி, ஆய்வுக்கு முன்பே முடிவுசெய்.
foreknow
v. முன்னறிந்திரு, முன்னுனர்.
foreknowledge
n. முன்னறிவு.
forel
n. கணக்குப் புத்தகங்களுக்குப் மேலுறையாகப் போடப்படும் தோல் தாள்.
foreland
n. நிலக்கோடி, நிலமுனை, நிலக்கோடு, முற்புற நிலப்பரப்பு, முற்புற நிலக்கூறு.
foreleg
n. விலங்கினங்களின் முன்னங்கால்.
forelock
-1 n. நெற்றிமயிர்,. முன்குடுமி.
foreman
n. முறைகாண் ஆயத்தின் முகவர், தொழிலாளர் மேன்முறையாள்.
foremast
n. கப்பலின் சிறிய முன் பாய்மரம்.
foremost
a. எல்லாவற்றிற்கும் முற்பட்ட, முன்னணி முதன்மையான, மிக முக்கியமான, மிகச் சிறந்த, (வினையடை) முதன்முதலாக, முதலிற் குறிப்பிடத்தக்க, எல்லாவற்றிற்கும் முற்பட்டதாக.
forename
n. முதற்பெயர், கிறித்தவப்பெயர்.
forensic
a. சட்டஞ் சார்ந்த, வழக்குமன்றத் தொடர்புடைய.
foreordain
v. முன்னரே அறுதியிடு, முன்னரே குறித்து அமை.
forepeak
n. கப்பலின் முன்புறத்திற்கருகிலுள்ள குவிந்த சரக்கு வைக்கும் பகுதியின் முனை.
foreplan
v. முன்னதாகத் திட்டமிடு, முன்னரே ஏற்பாடு செய்.
foreplane
n. முதல்படி இழைப்புளி, வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல் தளமட்டம் செய்யப் பயன்படும் கருவி.
foreran, fore-run(1),
v. என்பதன் இறந்தகாலம்.