English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
force
-1 n. வலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி, சூழல்வலி, பயன்நிறைவுத் திறம், கலைவண்ண முனைப்பு, வாதவலிமை, நேர்மை வலு, சட்ட உரிமை வன்மை, நடமுறைதிறம், நடப்புநிலை, உயிர்க்கூறு, உட்கோள், இயற்கை ஆற்றல்கூறு, இயற்பண்பாற்றல், இயல்திறம், விசைத்திரம், (வினை) வற்புறுத்து, கட்டாயப்படுத்து, கற்பழி, வலிந்து செயற்படுத்து, வலிந்து வழி உண்டுபண்ணிச் செல், திணி, வலிந்து புகுத்து, முழு வலுக்கொண்டு இழு, முழு ஆற்றலுடன் தள்ளு, எகிறித்தள்ளு, தடைமீறிச் செல், உரிமை மீறு, வலிமையால் தகர்த்தெறி, முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய், மட்டுமீறி உழைக்கச் செய், மட்டுமீறி விரைவுபடுத்து, செயற்கையாகக் கனிவி, விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய், சொல் வகையில் வலிந்து பொருள்கொள், சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய், வன்கண்மையால் வெற்றிபெறு, வேறு வழியில்லாதாக்கு, நிர்பந்தப்படுத்து, போக்குமுட்டச் செய், அடக்கியாளு, வன்முறைப்படுத்து.
force majeure
n. (பிர.) தடுக்கமுடியாத வலுக்கட்டாய நிலை, ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் விலக்கமுடியாத இடையூறு, கட்டுப்படுத்த முடியாத இயீடுகளால் ஏற்படும் இக்கட்டு.
force-meat
n. பூரணம் வைப்பதற்காகக் குறுகத்தறித்து அரிந்து பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சி.
forced
a. மிக்க கடுமுயற்சி வாய்ந்த, செயற்கையான, போலியான, வலிந்து கனிவிக்கப்பட்ட.
forceful
a. ஆற்றல் வாய்ந்த, ஊக்கமிக்க, ஆற்றலுடன் இயக்கப் பெறுகிற.
forceps
n. பற்று குறடு, சாமணம் போன்ற இடுக்கி உறுப்பு.
forces
n. pl. படை வகுப்புக்கள், படைகள்.
forcible
a. வலுக்கட்டாயமான, வலிந்து செய்யப்பட்ட, மனத்திற்பதியும் படியான, ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய, ஈர்க்கக்கூடிய.
forcible-feeble
a. வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
ford
n. கடவுத்துறை, ஆறு முதலியவற்றில் நடந்து கடக்கக்கூடிய ஆழமில்லாப் பகுதி, (வினை) நடந்து ஆறு முதலியவற்றைக் கடந்து செல்.
fordid, v. fordo
என்பதன் இறந்தகாலம்.
fordone, v. fordo
என்பதன் முடிவெச்சம்.
fore
-1 n. முற்பகுதி, கப்பலின் முன்புறம், (பெ.) முன்புறமுள்ள, (வினையடை) முன்னால், முன்னிலையில்.
fore head
n. நெற்றி, நுதல்.
fore-cabin
n. இரண்டாவது உயர்வகுப்புப் பிரயாணகளிருக்கும் கப்பலின் முன்புற அறை.
fore-named,
a. முன்னரே பெயர் குறிப்பிடப்பட்ட, முன்னரே கூறப்பட்ட.
fore-sheets
n. pl. துடுப்பு வலிப்பவர்களுக்கான படகின் முன்புற உட்பகுதிக் கம்பியழி வேலி.
fore-top-gallant mast
n. பாய்மர உச்சியின்மேலுள்ள பாய்மரம்.
fore-top-mast
n. முன்னணிப் பாய்மரத் தலைப்பிற் பொருந்தப்பட்ட பாய்மரம்..