English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fore-topgallant-sail
n. கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய்.
forearm
-1 n. முன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு.
forebode
v. பொல்லாங்கு முன்னறிவித்துக் காட்டு, தீமை குறித்துக்காட்டு, தீக்குறியாயமை, பின்வரு தீமையின் முன்குறி காண்.
foreboding
n. தீமை முன்னறிகுறி, தீக்குறி, இடர் முன்னுணர்வு.
forecarriage
n. முன் சக்கரங்கள் தனித்தியங்கும் இயல்புடன் அமைக்கப்பட்ட வண்டியின் முன்பகுதி.
forecast
-1 n. முன் மதிப்பீடு, முன் ஆய்வு, உய்த்துமுன்னுணர்வு, வானிலை முன் கணிப்பு.
foreclose
v. தடைசெய், தவிர், விலக்கு, அனுபவ உரிமையைத் தடைசெய், அடைமான மீட்புரிமையைத் தடைசெய், பணம் செலுத்தாமைக்காக அடைமான மீட்புரிமை ஒழி, மீட்புரிமையை அகற்று, வேற்றுமைக்கிடமான உரிமையை முன்சென்று கைப்பற்றிவிடு.
forecourt
n. முன்கட்டு, கட்டிடத்தின் முன்புறத்துள்ள சுற்றுக்கட்டுள்ள முற்றம்.
foreedge
n. புத்தக முன்விளிம்பு, ஏட்டின் வெளியோரம்.
forefathers
n. pl. முன்னோர், மூதாதையர்.
forefinger
n. ஆட்காட்டி விரல், சுட்டு விரல்.
forefoot
n. விலங்கின் முன்னங்கால்களிபலொன்று, (கப்.) கப்பல் அடிக்கட்டையின் முன்னாலுள்ள துண்டுப் பகுதி.
forefront
n. முன்னிடம், முற்புறப்பகுதி, முன்னணி.
foregift
n. (சட்.) குத்தகையான முன் தவனைக் கட்டணம்.
foregleam
n. வருங்காலத்தின் கணநேரத் தோற்றம்.
forego
-2 v. முன்செல், முந்து.
foregoer
n. முன்னிருந்தவர், முற்பதவியாளர்.
foregone, v. forego
-2 n. என்பதன் முடிவெச்சம்.
foreground
n. படத்தின் முன்புறத் தோற்றம், மிகத்தௌிவாகத் தெரிகிற இடம்.
forehand
n. குதிரையின் முன் பகுதி, (பெ.) வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கிய.