English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
featherweight
n. மிக இலேசான பொருள், கனமில்லாத மனிதர், பளுக்குறைந்த (63 கல் எடைக்குக் குறைவான) பந்தயக் குதிரை ஓட்டி, கனங்குறைந்த (126 கல் எடைக்குக் குறைவான) குத்துச்சண்டைக்காரர்.
feathery
a. இறகு சார்ந்த, இறகு போன்ற, இறகுகளால் மூடப்பட்ட, இறகினைப்போன்ற தோற்றமுடைய.
feature
n. தோற்றம், வடிவம், உருவம், தனிச்சிறப்பு, தௌிவான முனைப்புக்கூறு, கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி, செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு, முனைப்பான கவர்ச்சிக்கூறு, (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை, தனி முதன்மைப்படுத்திக் காட்டு, இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு, படத்திரையில் காட்டு.
featured
a. தௌிவாக அமைந்த சிறப்புக் கூறுகளுள்ள.
featureless
a. தனிச்சிறப்புக் கூறுகளற்ற.
features
n. pl. முகத்தோற்றக் கூறுகள், முகத்தோற்றம்.
febrifuge
n. காய்ச்சல் தணிக்கும் மருந்து.
febrile
a. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சலின் தன்மையுடைய.
February
n. ஆங்கில ஆண்டின் இரண்டாம் மாதம்.
fecit, v. sing., fecerunt,
v. pl. (ல.) இதனை வரைந்தவர். (கலைப்படங்களின் கீழே கலைஞர் கையெழுத்துடன் தரப்படும் குறிப்பு.)
feckless
a. பயனற்ற, திறனற்ற, வீவ்ன.
feculent
a. கலக்கமான, கூழான, தீய வாடையுள்ள.
fecund
a. இனப்பெருக்க வளமுள்ள, செழிப்பான, வளமூட்டுகிற.
fecundate
v. வளமாக்கு, செழிப்புறச்செய், பயன் கொடுக்கச்செய், சினைப்படுத்து, பொலிவூட்டு.
fecundity
n. இனப்பெருக்க வளம், விளைவளம், பயனிறைவு.
fed, v. feed
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
federal
n. கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர், (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர், (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த, கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
federate
v. பொதுக்குறிக்கோளுக்காகக் கூட்டுக்குழுவாகச் சேர், கூட்டாட்சி அடிப்படை அமைப்பு உருவாக்கு.
Federation
ஒன்றாயம், கூட்டமைப்பு