English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fee
n. நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம், மரபுரிமையாகப் பெற்ற பண்ணை, உடைமை, பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம், வழக்கறிஞருக்குரிய ஊதியம், மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம், தேர்வு நுழைவுக் கட்டணம், சங்கக்கட்டணம், பள்ளிக்கூடக் கட்டணம், கூலி, (வினை) ஊதியமளி, கூலிக்கு அமர்த்து.
fee-faw-fum
n. குழந்தைகளை அச்சுறுத்தும் பொருளற்ற சொல்.
fee-sim-ple
n. வரையற்ற மரபுரிமையுடைமை.
fee-tail
n. மரபுரிமை வரையறைகொண்ட உடைமை, மரபுரிமைத் தொடர்பு அறுந்துவிட்டால் முன்னுரிமையாளருக்கே செல்லும் உடைமை.
feeble
n. வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி, (பெ.) வலுக்குறைந்த, மெலிந்த, ஆற்றலற்ற, தளர்ந்த, பயன்குன்றிய, உரமற்ற, மங்கலான, தௌிவற்ற, அறிவுத்திறம் குறைந்த, மதிமந்தமான, பண்பு முனைப்பற்ற, நொய்ம்மையான.
feeble-minded
a. மன உறுதியற்ற, அறிவு தளர்ந்த.
feed
-1 n. அருத்துகை, உண்பித்தல், தீனி கொள்வித்தல், மேய்த்தல், மேய்ப்பு, ஊண், தீனி, மேய்ச்சல், ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு, ஒரு முறைத்தீனி, புல்லுணவு, தழையுணவு, குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு, இயந்திரதுக்குரிய எரிபொருள், துப்பாக்கிக்குரிய மருந்து, நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர், (வினை) உணவளி, தீனியளி, அருத்து, உண்பி, ஊட்டு, மேயவிடு, உண்ணு, உணவுகொள், மேய், குழந்தைக்குப் பாலுட்டு, உணவாகப்பயன்படு, ஊட்டமளி, பேணிவளர், கொழுக்க வை, இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு, தீக்கு விறகூட்டிக்கொண்டிரு, தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு, உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு, மனநிறைவூட்டு, அவா நிறைவுபடுத்து, தற்பெருமைக்கு நிறைவளி, அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
feed-head
n. கொதிகலத்துக்கு நீருற்றும் தொட்டி.
feed-pipe
n. ஊட்டக்குழாய், இயந்திரத்துக்கு வேண்டுவன கொண்டுசெல்லும் குழாய்.
feed-pump
n. கொதிகல நீரேற்றி, கொதிகலத்திற்கான நீரை மேலேற்றும் நீர்க்குழாய்.
feed-tank, feed-trough
n. நீராவி இயந்திரத்திற்குத் தேவையான நீரைச் சேமித்து வைக்கும் தொட்டி.
feed(2), v. fee
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
feeder
n. ஊட்டுபவர், ஊட்டுவது, உண்பவர், குழந்தையின் பால்புட்டி, குழந்தையின் மார்பாடை, அணையாடைட, தலையாற்றில் விழும் கிளையாறு, அடிப்பவரிடம் பந்தினைச்செலுத்தும் ஆட்டக்காரர், இயந்திரத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்பும் கருவி.
feeding
n. ஊட்டல், தீற்றுதல், உண்ணல், எரிபொருளுட்டுதல், அவா நிறைவேற்றுதல், மேய்ச்சல் தீனி, உணவு, அச்சுக்கு ஆயத்தமாக, ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
feeding-bottle
n. குழந்தையின் பால் புட்டி.
feel
n. தொட்டறியும் உணர்வு, தொட்டுத் தேர்வு, தொட்டுத்தேர்வுணர்வு, நுண்ணிய உணர்வு, இனமறியாஉள்ளுணர்ச்சி, (வினை) தொட்டுணர், உணர்வுகொள், பட்டுணர், நுகர்ந்தறி, தொட்டுப்பார், தடவிப்பார், தொட்டுத்தேர்ந்து பார், உள்ளத்தில் உணர், உடலுணர்ச்சி கொள், மதவுணர்ச்சி கொள், உள்ளுணர்வுகொள், இனமறியா உள்ளுணர்ச்சிகொள், இன்பதுன்ப நுகர், படு, உணர்வு பெறு, உணர்வுநிலைகொள், நினை, எண்ணு, எண்ணிப்பார், இரங்கு.
feeler
n. உணரிழை, வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு, முன்னீடான சோதனை முயற்சி, முன்ணனி வேவுப்படைஞர், எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
feeling
n. உறுதலுணர்ச்சி, தொட்டறி உணர்ச்சி, உடலுணர்வு, உள்எழுச்சி, எண்ணம், மனஉணர்ச்சி, உள்ளுணர்வான நம்பிக்கை, (பெ.) கூருணர்ச்சியுடைய, நுண்ணுணர்ச்சிதயுடைய, உணர்ச்சியை வெளிக்காட்டுகிற, இரக்க உணர்வுள்ள, உளமார்ந்த.
feelings
n. pl. உள்ளுணர்ச்சிகள், உண்ளெண்ணங்கள், விருப்புபெறுப்பு அலைகள்.