English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fathom
n. இருகைப் பாவு அகலம், நான்குமுழம், ஆறு அடியளவு, ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி, எட்டும் அளவு, பிடி அளவு, உள்ளத்தின் அறிவாழம், அறிவுத்திற அளவு.
fatidical
a. வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த.
fatigue
n. களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய்.
fatling
n. கொழுங்கன்று, இறைச்சிக்காகக் கொழுக்க வைத்த இளங்கன்று.
fatten
v. கொழுக்க வளர், இறைக்சிக்காகக் கொழுக்க வை, செழிப்புடையதாக்கு.
fatty
n. சதைப்பற்றுள்ள குழந்தை, குண்டான குழந்தை, (பெ.) கொழுப்புப்போன்ற, கொழுப்புள்ள, பிசுக்குள்ள, நோய் காரணமாக உடல்பெருத்த.
fatuous
a. மடத்தனமான, பயனற்ற.
faubourg
n. புறநகர்ப்பகுதி, புறஞ்சேரி, பாரிஸ்நகர்ப்புறப் பகுதி.
faucal
n. (ஒலி.) ஆழ்மிடற்றொலி, (பெ.) மிடற்றிற்குரிய, மிடற்றொலி சார்ந்த.
fauces
n. pl. (ல.) (உள்.) வாயின் பின்பக்கப் புழை.
faucet
n. மிடாவின் திறப்படைப்புக் குழாய்.
fauch
int. அலுப்புக் குறிப்பு.
fault
n. குற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.
faulty
a. குறையுடைய, குற்றமுடைய, குற்றங் கூறத்தக்க.
faun
n. கொம்பும் வாலும் கொண்ட பண்டை ரோமாபுரிச்சிற தெய்வம்.
fauna
n. மாவடை, திணைநிலத்துக்குரிய உயிரினத் தொகுதி, திணை மாவடை ஆய்வுரை.
fauteuil
n. (பிர.) கை நாற்காலி, நாடகக் கொட்டகையில் ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலி வரிசை.
faux pas
n. (பிர.) சொல்லிழுக்கு, செயலிழுக்கு, புகழ் கெடுக்கும் செயல், பெண்பாலரின் நற்பெயருக்கு இழுக்கந்தருஞ் செய்கை.
favour
n. நட்பாதரவு, நல்லெண்ணம், தயவு, கருணை, அன்பாதரவு, நலம், அனுகூலம், துணையாதரவு, உதவி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், சலுகை, ஒரு சார்பு, ஓரவுணர்வு, நட்புநோக்கு, தயவுக்குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, அன்புச்செயல், ஆதரவுச்செயல், அன்புச்சின்னம், ஆதரவு, அறிகுறி, திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை, நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை, (வினை) நல்லெண்ணம் காட்டு, கண்ணோட்டம் செய், அன்புடன் நோக்கு, அன்புடன் நடத்து, ஆதரவு காட்டு, சாதகமாயிரு, சார்பாகத் தௌிவு கொடு, கோட்பாட்டுக்கு வலியுறவு அளி, செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு, உதவு, ஆதரி, நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு, சலுகையளி, நலம் வழங்கு, விரும்பு, விருப்பம் தெரிவி, விருப்பத்தேர்வு செய், ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு, தோற்றத்தில் ஒத்திரு.
favourable
a. நட்பான, உகந்த, தகுந்த, தக்க, நல்லாதரவான, பரிந்துரைக்கிற, சார்வான, ஊக்குகிற, நம்பிக்கையளிக்கிற, உதவியான.