English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fastidious
a. நுணுக்க நயம் எதிர்பார்க்கிற, எளிதில் மனநிறைவு செய்ய முடியாத, கூர்நனிச் சுவையுடைய.
fastigiate
a. (தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய.
fastness
-1 n. கோட்டைட, அரண்காப்பு, உறுதி.
fat
n. கொழுப்பு, நிணம், விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு, தாவர நெய், விலங்குயிர்களின் கொழுப்பு நெய், கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள், பொருளின் செழும்பகுதி, ஆதாயம் தரும்தொழிற்பகுதி, நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி, (பெ.) கொழுத்த, இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, அச்சுரு வகையில் திண்ணிய, கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற, அறிவுமந்தமான, சுறுசுறுப்பான, முழுநிறைவான, மக்கான, (வினை) கொழுக்கவை, கொழுப்புடையதாகு, பெருக்கமுறு.
fat-head
n. அறிவு மந்தமானவர்.
fat-hen
n. தடித்த இலையுள்ள செடிவகை.
fata morgana
n. (இத்.) மெசினா கடல் இடைக்கழியில் தோன்றும் கானல்.
fatal
a. சாவுக்குரிய, உயிர்போக்கிவிடத்தக்க, சாவு தருகிற, அழிவார்ந்த, இறுதிக்கட்டமான, காலக்கேடான, இடரார்ந்த, கேடார்ந்த, ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட, முடிவான, விதிவசமான, ஊழ்முடிவை முன்னறிவிக்கிற, ஊழ்போன்ற, தவிர்க்கமுடியாத, முக்கியமான.
fatalism
n. ஊழ் வலிக் கோட்பாடு, விதிவசம் என்ற நம்பிக்கை, விடடவழி என்றிருக்கும் மனப்பான்மை, மாறாஊழ்வகுப்பு நம்பிக்கை காரணமான முயற்சியற்ற தன்மை.
fatality
n. ஊழ் நியதி, விதியின் கட்டளை, விலக்க முடியாநிகழ்வு, விதிவசமான முடிவு, இடும்பை, இயல்பான இடர்நேர்ச்சி, உயிரிழப்பு, இயற்சாவு நேர்வு.
fatalize
v. ஊழ்வகுப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளு, ஊழின் ஆட்சிக்கு உட்படுத்து.
fate
n. ஊழாற்றல், விதி, நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர், விலக்கமுடியா நேர்வு, வகுத்த வகுப்பளவு, அமைத்த அமைப்பு, வரையறுக்கப்பட்ட கால எல்லை, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடுகாலம், நடக்க இருப்பது, நிகழ வேண்டியது, (வினை) ஊழாக வகுத்தமை.
fateful
a. ஊழ் செறிந்த, விதிவசமான, கேடு குறித்த, பெரு நிகழ்ச்சிக்குரிய, காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க, முக்கியன்ன, ஊழால் இயக்கப்படுகிற, ஊழாற்றல் காட்டுகிற.
father
n. தந்தை, மூதாதை, முன்னோள், ஊங்கணோர், முதுகணாளர், பாதுகாவலர், தோற்றுவித்தவர், மூலமுதல்வர், முதல் முதல் திட்டமிட்டவர், முதல் தலைவர், தொடக்ககாலத் தலைவர், ஏடு ஆக்கியோன், மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர், பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன், கடவுள், கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு, கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர், பாவமன்னிப்புச் செய்பவர், சமயகுரு, மடத்துத்தலைவர், போப்பாண்டவர், சமய மாவட்ட முதல்வர், ஆட்சிக் குழுவினர், நகரவை மூப்பர், மன்ற மூப்பர், சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர், மூலமுதல் கருத்து, மூல முதற்படிவம், (வினை) மகவாகப் பெற்றெடு, தந்தையாக விளங்க, தந்தைமை ஒப்புக்கொள், தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு, தோற்றவி, ஏட்டினை ஆக்கு, ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள், ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு, தந்தைபோலிருந்து அன்பாட்சி செய், குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய், ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
father-figure
n. மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர்.
father-in-law
n. மாமனார், மனைவியின் தந்தை, கணவனின் தந்தை.
fatherland
n. தந்தையர்நாடு, தாய்நாடு, பிறந்த நாடு, செர்மனிநாடு.
fatherless
a. தந்தையற்ற, ஆக்கியோன் அறியப்பெறாத.
fatherly
a. தந்தையொத்த, தந்தைக்குரிய.