English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
farthing
n. ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
farthingale
n. குடைப்பாவாடை, முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள்.
fary
-2 v. தேய்த்து இறும்படி செய், முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ், தேய்வினால் இற்றுப்போ, முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
fasces
n. pl. பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம், மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
fascia
n. மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி, (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை, பட்டிகை, கச்சை, நாடா, உந்துவண்டியில் கருவித்தட்டி.
fascia-board
n. உந்துவண்டியில் கருவித்தட்டி.
fasciated
a. (தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள, வரியுடைய, கோடுகளைக் கொண்ட.
fascicle, fascicule, fasciculus
(தாவ.) கொத்து, திரள்.
fasciculation
n. தவணைகளாக வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி.
fascinate
v. கவர்ச்சியுட்படுத்து, ஈர்த்துப்பற்று, தப்பமுடியாமல் பார்வையாலே ஈர்த்துப்பிடி.
Faseism, Fascismo
பொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி, இத்தாலிய வல்லாண்மைக்கட்சி, நாட்டுரிமைச் சமதர்மக்கட்சி, ஆட்சி வல்லாண்மை முறைமை.
fashion
n. வடிவமைதி முறை, அமைப்புமுறை, படிவம், பாணி, காலவண்ணம், நாண்மரபு வழக்கு, நடப்பு வழக்கு, புறத்தோற்றம், பண்பாளர் குழாம், உயர்சமுதாயம், (வினை) உருவாக்கு, புனை, வனை, படிவமாக அமை, இசையஅமைத்துக்கொள்.
fashion-plate
n. உடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம், பகட்டழகாக உடையுடுத்துபவர்.
fashionable
n. காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர், புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர், (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய, காலநடைமுறைக்கேற்ற, புதுத்தினுசான, நவநாகரிகமான, நடப்பிலுள்ள, எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற, புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
fast
-1 n. நோன்பு, உணவுமறுப்பு, உண்ணாநிலை, நோன்புப்பருவம், நோன்புநாள், உணவு உண்ணாமை, (வினை) நோன்பிரு, உணவு மறு, குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு, சமயவினை காரணமாக நோன்பாற்று, துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு, உணவின்றியிரு, பட்டினிகிட.
Fast food
விரைவுணா (உணவு), உடனடி உணவு, விரைவு உணவகம்
fast-handed
a. கஞ்சத்தனமான.
fasten
v. இறுக்கு, கெட்டியாக்கு, கட்டு, பொருத்து, இணைவி, தாழிடு, பூட்டு, கொளுவிமாட்டு, ஊன்று, பதியவை, கூர்ந்து நோக்கு, கட்ட வை, மேற்கொள், தெரிந்தெடு, பற்று, பிடி, இறுகு, பொருந்து, தாக்குதல் தொடங்கு.
fastening
n. கட்டுதல், இறுக்குதல், கட்டுவது, இறுக்கவது, ஊன்றி நோக்குதல், ஊன்றிய பார்வை, சாட்டுப்பெயர், சாட்டுப்பெயர் இணைப்பு.
fasti
n. pl. (ல.) காலவரிசைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்பதிவேடு, வரலாற்றுப் பதிவேடு.