English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
deus exmachina
n. தெய்வக் குறுக்கீட்டுமுறை, காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
Deus misereatur
ஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல்.
deuteragonist
n. நாடகத்தில் முதல்வருக்க அடுத்த முக்கியத்துவமுடையவர்.
deuterium
n. நீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள்.
Deuteronomist
n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர், விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
n. விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
deutzia
n. வெண்பூவையுடைய புதர்ச் செடிவகை.
deux-temps
n. விரை ஒத்திசை நடனவகை.
devastate
v. பாழாக்கு, சூறையாடு.
develop
n. மடிப்புவிரி, வளரச்செய், முதிர்ச்சியடையச் செய், வளர், முதிர்ச்சியுறு, உள்விளைவுறச் செய், உள் முதிர்வுறு, முகையவிழச்செய், மலர்ச்சியுறுவி, மலர்ச்சியுறு, உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர், உருமலர்ச்சியுறு, கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு, படிப்படியாகத் தோற்றுவி, புறந் தோற்றுவி, வெளிக்கொணர்ந்து காட்டு, தோன்று, வெளிப்படு, தளை நீக்கி வெளிக்கொணர், சமதளப்படுத்து, விளக்கியுரை, பெரிதாக்கு, பெரிதாக, நிறைவு பெறுவி, நிறைவு பெறு, புது உபயோகத்துக்குக் கொண்டுவா, எளிதாகக் கிடைக்கச் செய், மேம்படுத்து, படிப்படியாக உஸ்ர்நிலையடைவி, எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல், மேம்படு, உஸ்ர்நிலை பெறு, உயர்படிமையுறு, புதுநெறி கண்டு வளமுறுத்து, புதுவளம்பெறு, புதுவழிப்பட்டு விரிவுறு, நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி, இயல்வளமுறு, படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு, சதுரங்கத்தில் தாக்குதலில் முனை, நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து, (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
development
n. வளர்ச்சி, பெருக்கம், விரிவு, முன்னேற்றம், வெளிப்படுத்துதல், புதுவளம், வளர்ச்சி உண்டு பண்ணுதல், படிப்படியாக, வளர்தல், சிறிது சிறிதாக வெளிப்படுதல், (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம், விரிவாக்கம், புத்தாக்கம், (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம், பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
developmental
a. வளர்ச்சி சார்ந்த, பெருக்கத்துக்குரிய உருமலர்ச்சி சார்ந்த, வளர்ச்சியோடு தொடர்புகொண்டுள்ள.
deviate
n. பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர், (வினை) மாறு, வேறுபட்டுச் செல், மாறுபடு, மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு, இடைபிறிதுபடு, இடைவிலகிச் செல், தவறிழை, விலகத் தூண்டு.
deviation
n. விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
device
n. வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம்.
Devil
n. கூளி, கடவுள் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி, பிசாசு, தீய ஆவி, குறும்புத்தெய்வம், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல், தீமையின் உருவம், கொடுமையின் வடிவம், போர்வெறி, மூர்க்கம், தாக்குதல் செய்யும் துணிச்சல், கொடியவர், ஆணவக்காரர்ம, நற்பேறற்றவர், அப்பாவி, துயர்பபட்டவர், கெடுவிலங்கு, வியத்தகு திறம்படைத்தவர், அச்சகப் பையன், எடுபிடியாள், இலக்கியக் கூலியுழைப்பாளர், வழக்குரைஞரின் துணைப் பணியாளர், வாணவெடி, புழுதிப்புயல், மண்மரி, சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை, பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு, கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை, சினயவ்ன், தொல்லை, (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று, ஆசிரியரின் சிற்றாளாக உழை, சுவையூட்டி அவியடியை வேகவை.
devil-box
n. மின்னணுவியக்கத்தாலான கணிப்பு மானி,.
devil-crab
n. வழவழப்பான நண்டு வகை.
devil-dodger
n. தௌிவின்றிப் பல கோயில்களில் உழல்பவர், சமய போதகர்.
devil-fish
n. தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை, குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை, கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.