English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
determined
a. கண்டறியப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட நிலையான, வளைந்து கொடாத, அசையா உறுதியுடைய, முன்பே வரையறுக்கப்பட்ட, கருத்துறுதி உடைய, தீர்மானமான, அறுதி செய்யப்பட்ட.
determinism
n. நியதிவாதம், மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
detersive
n. துப்பரவு செய்யும் பொருள், (பெயரடை) தூய்மைப்படுத்துகிற.
detest
v. வெறுத்தொதுக்கு, அறவே வெறு, முனைப்பாக வெறுப்புக்கொள்.
detestation
n. அறவே வெறுத்தொதுக்கதல், முழு வெறுப்பு.
dethrone
v. தவிசிறக்கு, அரசுரிமையிலிருந்து தள்ளு, உஸ்ர்நிலையினின்று அகற்று.
detinue
n. சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
detonate
v. அதிர்வேட்டுப்போடு, முழக்கத்துடன் வெடிக்கச் செய், உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
detonator
n. ஓசையுடன் வெடிக்கும் பொருள், வெடிப்பைத் தூண்டும் கருவி, புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
detour
n. சுற்றுவழி, வளைந்து செல்லும் வழி, இடைச்சுற்று வழி, மற்றொன்று விரித்தல்.
detract
v. குறைவுபடுத்து, குறைவுபடச் செய், இழிவுபடுத்து, பெருமை குலை, நற்பெயரைக் கெடு, பழித்துக்கூறு, தரம் குறை, அளவிற் குறைபடு.
detrain
v. புகைவண்டியிலிருந்து இறங்கு.
detriment
n. தீங்க, கெடுதல், நட்டம், சேதம், குறைவு,
detrimental
n. விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர், உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர், தீங்க தரத்தக்கவர், நட்ட முண்டாக்கக்கூடியவர், (பெயரடை) தீங்கு தரத்தக்க, நட்டமுண்டாக்கக்கூடிய.
detrited
a. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான.
detrition
n. உராய்வினால் வரும் நாட்படு தேய்வு.
detritus
n. பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம்.
Deuce
n. மின்னணுவியக்கக் கணக்குமானி.
deuce-ace
n. பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல், பேரவப் பேறு, மிக மோசமான வாய்ப்புக்கேடு.
deuced
a. பேய்த்தனமான, பாழாய்ப்போன, மிகப்பெரிய, மிகுதியான, (வினையடை) பாழான முறையில், மோசமாக, மிகுதியாக.