English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barracoon
n. அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு, கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
barracuda
n. மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்.
barrage
n. அணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
barrage-fire
n. பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல், குண்டு மாரித் தரை.
barrak
n. போர்வீரர் குடியமைப்பு வரிசை, கட்டுக்குடியிருப்பு, கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை, (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
barranca, barranco
ஆழமான கெவி, மலைப்பள்ளம்.
barrater, barrator
தீராவழக்காடி, சச்சரவு உண்டு பண்ணுபவர்.
barratrous
a. வீண்வழக்காடுகிற, வீண்வழக்குத் தூண்டுகிற.
barratry
n. (கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல், (சட்) வீண்வழககாடல், வீண் வழக்காடத் தூண்டுதல்.
barred
a. கம்பிபோட்ட, கம்பிகள் உடைய, பாதுகாக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, மூடப்பட்ட, கம்பியால் அடையாளம் இடப்பட்ட, தடுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
barrel
n. பீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை.
barrel-bulk
n. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை.
barrelage
n. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு.
barrelful
n. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு.
barrelled
a. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய.
barren
n. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
barrenness
n. மலடு, தரிசுநிலை.
barret
n. தட்டைத் தொப்பி.
barricade
n. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
barrier
n. தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.