English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								blue-ground
								n. வைரங்கள் கிடைக்கும் பாறைவகை.
								
							 
								blue-gum
								n. (தாவ.) நீலகிரிமலைத் தைலமரம்.
								
							 
								blue-jacket
								n. கடற்படையிலுள்ள கடலோடி.
								
							 
								blue-pencil,
								n. திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல்.
								
							 
								blue-print
								n. நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம், முதனிலைப் படிவம், பூர்வாங்கப்படி, செய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்.  (வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடு, பூர்வாங்கப் படிவம் உருவாக்கு.
								
							 
								blue-rot
								n. பூஞ்சக்காளான் வகையினால் மரத்தில் ஏற்படும் நீலச்சாயல்.
								
							 
								blue-stone, bluevitriol
								n. மயில்துத்தம், செப்புக்கந்தகி.
								
							 
								blue-water
								n. அகல்பெருங்கடல், கடற்பரப்பு.
								
							 
								Bluebeard
								n. பல மனைவியர்களையுடைய கணவன்.
								
							 
								bluebird
								n. பாடும் பறவையினத்தின் வகை.
								
							 
								bluebottle
								n. (தாவ.) சில மலரையுடைய களைவகை, பூச்சிவகை.
								
							 
								bluecap
								n. மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு, வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
								
							 
								bluedevils
								pl. வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள், மனச்சோர்வு.
								
							 
								blueeye
								n. நீலக்கதுப்புடைய தேனுண்ணும் பறவை வகை.
								
							 
								bluegown
								n. உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர்.
								
							 
								bluegrey
								a. வெளிறிய நீலமான.
								
							 
								blueing
								n. உலோகங்களுக்கு நீலவண்ணம் தோய்த்தல், மரக்கட்டை மக்கிப்போதல்.
								
							 
								bluejay
								n. அமெரிக்கப் பறவைவகை.