English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
admonitive
a. கண்டிக்கிற.
admonitor
n. அறவுரை பகருநர், நீதிபோகர்.
admonitory
a. நன்னெறி காட்டுகிற.
adnominal
a. பெயர்ச்சொல் சார்ந்த, பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
adnoun
n. (இலக்.) பெயர் தழுவிய சொல், பெயர் அடை, பெயர்குறிக்கும் பெயர் அடை.
ado
n. அமளி, வெறும் ஆரவாரம், ஆகுலம், தொந்தரவு, இல்ர்,
adobe
n. உணக்கிய செங்கல், வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல், உணக்கிய செங்கல் கட்டிடம், (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன, உணக்கிய செங்கல்லுக்குரிய.
adolescence, adolescency
n. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம்.
adolescent
n. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
adolotropy
n. நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Adonis
n. அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன், வீண் பெருயுடையான்.
adonise, adonize
அழகுபடுத்து.
adopt
v. தத்துஎடு, பிள்ளை கூட்டு, தேர்ந்தெடு, தனதாக ஏற்றுக்கொள், மேற்கொள்.
adoption
n. பிள்ளைகூட்டு, மகவேற்பு, மேற்கொள்ளுதல், ஏற்பு, தனதாகக்கொள்ளுதல், ஏற்பிசைவு, தெரிவு, தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
adoptive
a. தனதாக ஏற்ற, தனதாக ஏறகப்பட்ட
adorable
a. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய.
adoration
n. வழிபாடு, வணக்கம், வந்தனை, ஆன்றமதிப்பு.
adore
v. போற்று, பூசி, வழிடு, நலம் பாராட்டு, மிகுநேசம் கொள்.
adorer
n. போற்றுபவர், ஆர்வலர், காதலர்.
adoring
a. மெச்சுகிற, போற்றுகிற.