English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
astrophysics
n. வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
astrut
adv. துதிக்கொண்டு, பரப்பிக்கொண்டு, வீறாப்பாக.
astucious
a. கூர்ந்தறியும் திறமுடைய, சூழ்ச்சிநுட்பமுடைய.
astucity
n. கூர்மதியுடைமை.
astute
a. கூர்மதியுடைய, நுண்புலம் வாய்ந்த, சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
astuteness
n. கூர்மதி, நுழைபுலம், சூழ்ச்சித்திறம்.
asudden
adv. திடுமென, உடனடியாக.
asunder
adv. வேறாக, துண்டாக, ஒதுக்கி.
aswoon
adv. உணர்விழந்த நிலையில்.
asylum
n. புகலிடம், காப்பிடம், அடைக்கலம், அறுக்கோட்டம், பித்தர் காப்புமனை.
asymmetric, asymmetrical
a. செவ்விசைவற்ற, சமச்சீர் அற்ற, உருக்கோட்டம் உடைய.
asymmetry
n. செவ்விசைவின்மை, உருக்கோட்டம்.
asymptote
n. தொடர்வரை, வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு.
asynchronism
n. காலமுரண், ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
asynchronous
a. கால இசைவற்ற.
asyndeton
n. இணைப்பிசைச்சொல் தொக்க அணிநிலை.
asyntactic
a. இசைவின்றித் தொடுத்த, இலககணத்துக்கு இயையாத.
asystole
n. (மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு.