English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ascendible
a. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
ascending
a. ஏறுகிற, உஸ்ர்கிற, நிமிர்கிற, உச்சிநோக்கிச்செல்கிற, மேன்மேல் விரைகிற.
ascension
n. ஏறுதல், எழுந்துசெல்லல், விண்ணேறுதல்.
ascensional
a. ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய.
Ascensiontide
n. இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம், புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
ascensive
a. ஏறுகிற, உயர்ந்து செல்கிற, மேற்சொல்லும் போக்குடைய, ஏறுபாங்கான.
ascent
n. ஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி.
ascertin
v. உறுதியாய் அறி, உறுதிப்படுத்து.
ascetic
n. கடுந்துறவி, தவசி, கடுநோன்பாளர், தன்ஒறுப்பாளர், (பெ.) கடுநோன்பு நோற்கிற.
ascetical
a. தன்னெறுப்புச் சார்ந்த, ஒதுங்கிவாழ்கிற.
asceticism
n. கடுநோன்பு, தஹ்ம், தன்னெறுப்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய, துறவு வாழ்வு.
ascian
n. நண்பகலில் நிழ்லவிழப்பெறாத வெப்பமண்டலத்தில் உறைபவர்.
ascidian
n. தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
ascidium
n. சாடி வடிவ இலை, சாடி வடிவமுடைய இலைப்பகுதி.
ascites
n. மகோதரம், அகட்டுநீர்க்கோவை.
ascitic, ascitical
மகோதரம் சார்ந்த.
Asclepiad
n. அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Asclepius
n. கிரேக்க மருத்துவத் தெய்வம்.
ascorbic
a. கரப்பானுக்கு எதிரான.