English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
whig
n. பிரிட்டனின் முற்கால மாறுதல் விருப்பக் கட்சியினர், (பெ.) பிரிட்டனின் முற்கால வழக்கில் மாறுதல் விருப்பக் கட்சி சார்ந்த.
whiggarachy
n. மாறுதல் விருப்பக் கட்சியாட்சி.
whiggery
n. மாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு.
whiggish
a. மாறுதல் விருப்பக் கட்சிக் கொள்கைச் சுவடுஉடைய.
whiggism
n. மாறுதல் விருப்பக் கட்சிக் கோட்பாடு.
whigship
n. மாறுதல் விருப்பக் கட்சித்தன்மை.
while
n. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக.
whilom
a. முன்னாளைய, (வினையடை.) (பழ.) ஒரு காலத்தில், முன்பு.
whilst,
conj. (பழ.) பொழுதிலேயே.
whim
n. தற்போக்கெண்ணம், விளையாட்டு மனப்போக்கு, திடீர்த்திடீர் நினைவு, திடீர் ஆர்வக்கரத்து, சபலக் கருத்து, எண்ணக்கோளாறு, சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி.
whimbrel
n. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
whimmy
a. சபலக்கருத்து வாய்ந்த, மனம்போன போக்குடைய.
whimper
n. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு.
whimsical
a. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய.
whimsy
n. திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய.
whimwham
n. விளையாட்டுக் கருவி, விளையாட்டுப் பொறி, சிறுபிள்ளைத்தனமான செய்தி.
whin
-1 n. மஞ்சள் நிற மலர்ச்செடிவகை.
whinchat
n. சிறு பறவை வகை.
whine
n. நெடுங்குரல் ஊளை, ஏங்கு அழுகுரல், சிணுக்கம், குறை தெரிவிப்பழுகை, புலம்பல், உளறல், (வினை.) நெடுங்குரல் ஊளையிடு, ஏங்கியழு, அழுது குறைதெரிவி, சிணுங்கு, புலம்பு,உளறு.