English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
warning
n. எச்சரிக்கை, எச்சரிக்கை செய்தல், முன்னறிவிப்பு.
warp
n. பாவுநுல், நீட்டுவாட்டான நெசவிழை, கப்பலீர்ப்புக் கயிறு, வெட்டுமர உருக்கோட்டம், மனக்கோட்டம்,வண்டல், வண்டற் படிவு, (வினை.) உருக்கோணலாக்கு, ஏறுமாறான போக்குடையதாக்கு, உருக்கோணலாகு, ஒருபுறமாகச் சாய்வி, கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு, கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல், வண்டல் படிவித்து வளப்படத்து.
warrant
n. அத்தாட்சிப்பத்திரம், செயலிசைவாணை, பற்றாணை, காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம், சான்றுச் சிட்டை, செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு, பணிமுறை அதிகாரப் பத்திரம், பேராண்மைச்சான்றிதழ், பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு, பிணையாதாரம், பிணையுறுதி, சான்றுறுதி, சான்றாதாரம், ஆதார நேர்மை, போதிய ஆதாரம், (வினை.) அதிகாரங்கொடு, அத்தாட்சி வழக்கு, பேராண்மையளி, பற்றாணைகொடு, பிணையுறுதியளி, பிணைப்படு, உத்தரவாதமாயிரு, உத்தரவாதஞ் செய், போதிய ஆதாரமாயிரு, சான்றுறுதியளி, உறுதியாகக் கூறு, உத்தரவாதமாகக் கூறு.
warrant-officer
n. பற்றாணை அலுவலர்.
warrantable
a. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய.
warrantee
n. பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர்.
warranter
n. இசைவாணை கொடுப்பவர், உத்தரவாதஞ் செய்பவர், (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர்.
warrantor
n. (சட்.) பிணைச்சீட்டுகொடுக்கும் விற்பனையாளர்.
warranty
n. சான்றுவலிமை, நேர்மையெனக் காட்டுதற்குரிய அடிப்படை ஆதாரம், (சட்.) உத்தரவாதச் சீட்டு.
warren
n. குழிமுயற்பண்ணை.
warring
a. போட்டி பூசல்களிடுகிற, முரண்பாடான.
warrior
n. (செய்.) மாவீரர், போரேறு, பொருபடைவீரர், (பெ.) நாடு வகையில் போர்விருப்பமுள்ள, காட்டுமிராண்டிகள் வகையில் மனிதனோடு போரிடுகிற.
wart
n. பாலுண்ணி, கழலை, உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி, கரணை, செடித்தண்டில் தோன்றும் புடைப்பு.
warty
a. பாலுண்ணிபோன்ற, பாலுண்ணிபோன்ற புடைப்புகள் நிறைந்துள்ள.
wary
a. இடையறா விழிப்புடைய, இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய, தளரா உன்னிப்புடைய.
was
v. 'பீ' என்பதன் தன்மை-படர்க்கை இடங்கள் சார்ந்த ஒருமை இறந்த கால வடிவம்.
wash
n. கழுவுதல், கழுவப்பெறுதல், ஆடை துவைப்பு, ஆடை அலக்கீடு, வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி, வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி, வெளுத்து வந்த துணிமணித்தொகுதி, நீரலம்பீடு, நீரலம்பொலி, நீர்போழ் வலைவு, கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள், நீரரிப்பு, நீரரிப்பு மண், நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண், அரிப்பு வண்டல், ஆறிடுமண், கழிவுக்கழுநீர், பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர், பாழ்ங்கஞ்சி நீர், செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம், மட்ட நிர்மம்,பிதற்றல், பயனற்ற பேச்சு, கழுவுநீர்மம், அலம்புநீர்மம், நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம், மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம், மேற்பூச்சு வண்ண நீர்மம், ஒப்பனை நீர்மம், நீர்வண்ணச்சாயம், (வினை.) கழுவு, அலம்பு, மேலோடி அலம்ப விடு, அலம்பிச் செல், உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு, கழுவித் துப்புரவுப்படுத்து, கழுவிக் கறைநீக்கு, அலக்கு, சலவைத்தொழில் செய், ஆடைவெளு, சாயப்பொருள், வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு, ஈரமாக்கு, ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு, பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல், பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு, குடைந்தெடு, தோண்டு, நீர் சிதறடித்துக்கொண்டு செல், துடைத்தழித்துக்கொண்டு செல், உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு, தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு, மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
wash-basin
n. அலம்பு தட்டம்.
wash-board
n. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை.