English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
waste-pipe
n. கழிவுநீர்க் குழாய்.
wasteful
a. ஊதாரித்தனமான.
wasteless
a. வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத.
waster
n. ஊதாரி, வீணாக்குபவர், பாழாக்குவது, வீணாக்கப் பட்ட செய்பொருள்.
wastrel
n. கெட்டுப்போன செய்பொருள், கவனிப்பாரற்ற குழந்தை.
watch
n. கைக்கடிகாரம், காத்திருக்கை, காவல், விழிப்பு நிலை, உன்னிப்பு, கவனிப்பு, இராக்காவல், முற்கால நகர் சுற்றுக்காவல், நகர்சுற்றுக்காவலர், நகர்ச்சுற்றுக் காவற்குழு, நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர், இரவுக் காவல்முறை, யாமம், இரவுநேர முறைக்கூறு, இரவுக் காவல் முறைநேர எல்லை, (அரு.) இரா விழிப்பு, (வினை.) கூர்ந்து நோக்க, கூர்ந்து கவனி, ஒற்றறாடு, காத்துப்பேணு, கவனித்து மேற்பார், காத்திரு, வேணவாவுடன் காத்திரு, எதிர்நோக்கிக் காத்திரு, எதிர்பார்த்துக் காத்திரு, வாய்ப்புக்காகக் காத்திரு, காலங்கருதியிரு, குறித்து விழிப்புடனிரு, உன்னிப்பாயிரு, முன்னெச்சரிக்கையுடனிரு, (அரு.) கண்விழித்துக்கொண்டிரு, இரவு விழித்திரு.
watch-fire
n. இராக்காலப் பாசறை நெருப்பு.
watch-night
n. முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு.
watch-tower
n. காவல் மாடம்.
watchdog
n. காவல் நாய், அக்கறையுடன் காத்துவருபவர்.
watcher
n. காவல்காப்பாவர், விழிப்புணர்வோடிருப்பவர், எச்சரிக்கையாயிருப்பவர்.
watchful
a. விழிப்பாயிருக்கும் இயல்புடைய, கூர்ந்து கவனிக்கிற.
watchword
n. கோட்பாட்டுச் சொல்.
water
n. நீர், மழைநீர், கண்ணீர், வியர்வை நீர், உமிழ்நீர், சிறுநீர், ஊனீர், கடல், ஏரி, ஆறு, நீர்நிலை, வேலைநீர், கடலின் ஏற்ற இறக்க நிலை, நீர்க்கரைசல், மருத்துக்கலவை அலம்பு நீர்மம், மணிக்கல்லின் ஒளிநீரோட்டம், கழுவுநீர், கழிவுநீர், நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம், (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி, பயிர்களுக்கு நீர் பாய்ச்சு, நீராளமாக்கு, பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய், நீரருத்து, குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு, கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல், ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு, கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள், கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு, நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு, பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து, வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Water filter
நீர் வடிகலன்
water-anchor
n. காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம்.
water-bailiff
n. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்.