English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ware
-1 n. செய்கலம், விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள், மட்கல வகை, செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள்.
warehouse
n. பண்டக சாலை, விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம், (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
warehouseman
n. பண்டகசாலை மேலாளர்.
wares
n. pl. விற்பனைப் பொருள்கள்.
warfare
n. போர் நடவடிக்கை, போர் நடப்பு.
warfarer
n. போர் நிலவரம் உண்டுபண்ணுபவர்.
warhorse
n. போர்க்குதிரை, பழம் படைவீரர், பழவீரர்.
warily
adv. இடையறா விழிப்புடன், சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக, மிக உன்னிப்பாக, மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
wariness
n. இடையறா விழிப்புடைமை, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை.
warlike
a. போரார்வமிக்க, வீரமான, போர்த்திறம் வாய்ந்த.
warlking-stick
n. ஊன்றுகோல், கைத்தடி.
warlock
n. சூனியக்காரர், மந்திரவாதி.
warm
n. வெதுவெதுப்பானது, படைத்துறை மேற்சட்டை, குளிர் காய்வு, குளிர் காய்வுதவி, குளிர்காய்விப்பு, மூட்டம், குளிர்காய்வமைவு, வெப்பூட்டமைவு, (பெ.) மிகு வெப்பான, மிகு உடல் வெப்பநிலையுடைய, உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற, ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற, மனமார்ந்த, மனமுவந்த, சிரத்தையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமிக்க, கிளர்ச்சியுடைய, விறுவிறுப்பான, எழுச்சிமிக்க, கிளர்ச்சிமிக்க, சினமுடைய, தீவிரமான, மனவெழுச்சி கொண்ட, இடரார்ந்த, நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான, உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள, உணர்ச்சி வசப்படுகிற, அன்புமிக்க, எளிதில் பதியத்தக்க, ஏற்குந்தன்மையுள்ள,வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய, மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள, குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள, கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள, நல்ல நிலையிலுள்ள, செல்வமிக்க, வளவாய்ப்பு நிறைந்த, (வினை.) சூடுபடுத்து, சுடவை, குளிர்காயவை, ஆடையை உலர வை, நன்றாக அடித்து நொறுக்கு, ஆவல்கொள், ஆர்வங்கொள், எழுச்சிகொள், சுறுசுறுப்பாடை, பரபரப்புக்கொள், ஒத்துணர்வுகொள்.
warm-blooded
a. வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த.
warm-hearted
a. அன்புள்ள, இரக்க குணமுடைய.
warming
n. வெதுவெதுப்பாக்குதல், கதகதப்பாக்குதல், (இழி.) அடித்து வீக்குதல், (பெ.) வெதுவெதுப்பூட்டுகிற.
warming-pan
n. கணப்புக்கலம்.
warmonger
n. போர் நாடுபவர்.
warn
v. எச்சரிக்கை செய், முன்னறிவிப்புச் செய்.