English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Viennese
n. வியன்னா நகரக் குடிவாணர், (பெ.) வியன்னா நகரஞ் சார்ந்த, வியன்னா நகரிலுள்ள.
view
n. நோக்கு, காட்சி, பார்வை, சுற்றுப்பார்வை, காட்சியெல்லை, பொதுக்காட்சி, இயற்கைக்காட்சி, உருக்காட்சி, தோற்றரவு, தோற்றம், தோன்றுதிறம், பார்வைக்கோணம், தோற்றக்கோணம், கருத்து, கருத்து நோட்டம், கவனம், கருத்துச் சார்பு, கருத்துச் சாய்வு, கருத்துப் பாங்கு, கருத்துச் சாயல், கருத்துக்கோணம், கொள்கை, கோட்பாடு, எண்ணம், உட்கருத்து, உள்நோக்கம், காரணம், நோக்கம், அவா நோக்கு, எதிர்நோக்கு, எதிர்காலம் பற்றிய கருத்து, காரியம், செயல்நோக்கம், (சட்.) பார்வையீடு, மேற்பார்வை, கண்காணிப்பு நோக்கு, சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி, (வி.) காண், நோக்கு, பார், சுற்றிக் காண், கவனி, கருது, எண்ணு, எண்ணிப்பார், கருத்துக் கொள், கண்டு முடிவுசெய், கண்டு மதிப்பிடு, உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய், சீர்தூக்கி ஆராய், உள்ளத்தில் திட்டமிட்டுக் காண், தொலைக்காட்சியில் காண், பார்வையிடு, கண்காணிப்பு நோக்குச் செலுத்து.
view-finder
n. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி.
viewable
a. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.
viewer
n. தொலைக்காட்சியாளர், தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
viewhalloo
n. புறப்பாட்டுக் கூவிஷீ, நரி மறைவினின்றும் வெஷீப்படுவதைக் காணும் வேட்டையாளரின் கூவொலி.
viewless
a. புலப்படாத, காட்சிக்குட்படாத.
viewly
a. (பே-வ.) காட்சிக்கு இனிய.
viewpoint
n. காட்சிக்கோணம், கருத்துக்கோணம்.
viewy
a. (பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய, விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட, வெறிப்போக்குடைய, தனிவெறிப் பாங்கான.
vigil
n. விஸீப்பு நிலை, இரா விஸீப்பு.
vigilance,
n. எச்சரிக்கை நிலை, தன்விஸீப்பு நிலை, விஸீப்பாயிருத்தல், (மரு.) உறக்கமின்மை, உறு கவனிப்புடைமை, தன் விஸீப்பு நிலை.
vigilant
a. விஸீப்புள்ள, எச்சரிக்கையாயிருக்கிற.
vigilante
n. நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர்.
vigils
n. pl. இரவு வஸீபாடுகள், பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
vignette
n. (க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு, முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு, முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம், புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம், பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை, பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம், கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம், இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம், (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை, பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய்.
vigorous
a. உள்ளுரம் வாய்ந்த, திடமான, உடல்நல உறுதி வாய்ந்த, விசையாற்றலுடைய, படு சுறுசுறுப்பான, திட்ப விறுவிறுப்புடைய, இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த, உயிரோட்டமுடைய.
vigour
n. விசையூக்கம், திடம், வலிமை, உடல் உறுதி நலம், ஆண்மை, ஊற்றம், உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, ஆற்றல்வளம், ஆற்றல்விசை, மணிச் செறிவு, செறி சுருக்கம்.
viking
-1 n. முற்கால ஸ்காந்தினேவிய கடற்கொள்ளை வீரர்.
vilaceous
a. செந்நீல நிறமான, செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த.