English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
undistributed
a. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத.
undisturbed
a. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற.
undivided
a. பகுக்கப்படாத, இடையீடற்ற, தொடர்ச்சியான, முழுமையான, கருத்து வேறுபாடில்லாத.
undo
v. கெடு, அழி, துடைத்தழி, கவிழ்த்து, அவிழ், பிரி, ஆடை வகையில் களைந்தகற்று, நற்பெயரைக் கெடு, கற்பழி, ஒழுக்கஞ் சிதைவி, புதிர்விடுவி, பிரச்சினை தீர்வு செய், கழல்வுறு, அவிழ்வுறு, தளர்வுறு, செய்த செயல் குலைவுறு.
undoable
a. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத.
undock
v. துறைமுகத்தளத் துறையிலிருந்து வெளியேற்று.
undoer
n. அழிப்பவர், ஒழிப்பவர், குலைப்பவர்.
undoing
n. அழிவு, அழிப்பு, அவிழ்ப்பு, அழிவுவேலை.
undomesticate
v. வீட்டுப் பழக்கமற்றதாக்கு, விலங்குகளை மனித வாழ்க்கைச் சூழற் பழக்கமற்றதாக்கு.
undomesticated
a. பயிற்றுவிக்கப்படாத, வசப்படுத்தப்படாத.
undone
-1 a. மாற்றிச் செய்யப்பட்டுவிட்ட, அழிக்கப்பட்ட.
undoomed
a. நரக தண்டனைக்கு ஆளாக்கப்படாத, பழித்தண்டத்துக்கு உட்படாத.
undose
a. அலை அலையான, அலைவளைவு வடிவான.
undouble
v. மடிப்பவிழ், முகிழ்ப்புறு, திற.
undoubtable
a. ஐயுறவு கொள்ளமுடியாத.
undoubted
a. ஐயத்திற்கு இடமற்ற, உறுதியான.
undoubtedly
adv. ஐயமின்றி, உறுதியாக.
undrainable
a. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத.
undrained
a. வடியவிடப்படாத, வடியவிட்டு அகற்றப்படாத.
undramatic
a. நாடகப் பண்பற்ற, நாடகத்திற்கு ஒவ்வாத.