English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tilery
n. ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்.
till
-1 n. கல்லாப்பெட்டி, கடையில் கொடுக்கல்வாங்கல் மேடையிலுள்ள பணச்செருகு பெட்டி.
till(4),
prep,. Conj வரை, வரையில், வரைக்கும்.
tillable
a. உழுது பயிரிடத்தக்க.
tillage
n. உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம்.
tiller
-1 n. உழுது பயிரிடுபவர், வேளாளர்.
tiller-chain
n. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி.
tiller-rope
n. பயின்கயிறு, சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு.
tillite
n. கடுங்களிமணல் உறைபாறை.
tilt
-1 n. சாய்நிலை, ஒருக்கணித்த நிலை, சரிவு, சாய்வு, சாய்பிடித்தாக்கு, எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல், மோதுவிசைக் குத்து, ஈட்டிப்போர், இருவர் கைகலப்புப்போர், குறுக்கைக்கோற்குறி, தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு, பொரிய கொல்லுலைச் சம்மட்டி, (வினை) சாய்நிலை, கொள்ளுவி, சாய்நிலை மேற்கொள், சரிவுறு, கப்பல் வகையில் சாய்ந்து கவிழ், ஈட்டிகொண்டு தாக்கு, பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு, படக்காட்சி, தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு, (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
tilt-boat
n. பெரிய கவிகைப்படகு.
tilt-hammer
n. பெரிய கொல்லுலைச் சம்மட்டி.
tilt-yard
n. வையாளி வீதி.
tilth
n. ஏராண்மை, பயிர்த்தொழில், உழவாழம்.
timbale
n. அச்சப்பம், கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை.
timber
n. மரத்தண்டு, கட்டை, வெட்டுமரம், கட்டிடம்,-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை, கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு, மரத்துண்டு, உத்தரம்.
Timber traders
வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மரவாணிகம்.
timber-head
n. தூலத்தலைப்பு, கயிறுகளை இறுக்கிக் கட்டுவதற்குப் பயன்படும் கப்பல் பக்க தூல முனை.