English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
terse
a. சொற்செறிவுடைய, அரணியலான.
terseness
n. செறிவடக்கம், மணிச்சுருக்கம்.
tertial
n. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) பறக்க உதவும் இறகுகளிலர் மூன்றாம் வரிசையிலுள்ள.
tertian
n. முறைவலிப்புக் காய்ச்சல், (பெயரடை) முறைவலிப்புக் காய்ச்சல் சார்ந்த.
tertiary
-1 n. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) முன்றாவது வரிசை சார்ந்த.
tertio
adv. மூன்றாவது இடத்தில்.
tertium quid
n. மூன்றாவதாக ஒன்று, மனமும் உடலும் அல்லாத ஒன்று, உடன்பாடு எதிர்மறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஒன்று.
tertius
a. பள்ளிச் சிறுவர்களுள் அதே பெயருடையவர்களில் மூன்றாமவனான.
Terylene
n. செயற்கை நுல்வகை, வேதிப்பொருள் உறைவு மூலம் ஆக்கப்பெரும் இழைவகை.
Tesla coil
n. (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
tessellar
a. பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
tessellated
a. சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள, (தாவ., வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
tessellation
n. பலவண்ணக் கட்ட அமைப்பு.
tessera
n. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளம், பண்டைய ரோமர் வழக்கில் அடையாளம்-நுழைவுச் சீட்டாகப் பயன்பட்ட சிறு சதுர எலும்பு.
tesseral
a. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளங்களால் ஆன.
test
-1 n. தேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை, மூசை, புட ஓடு, (வேதி) தேர்வுச்சான்று, (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள், தேர்வுமுறையாட்டம், அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம், (வினை) தேர்ந்தாய்வு செய், நோட்டமிட்டுத் தரம் காண், மாற்றுப் பார், மாற்றுத்தேர்ந்து பார், கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர், தேர்வுசெய்து பார், தேர்வுசெய்து எண்பி, கடுந்தேர்வுக் குள்ளாக்கு, கடுந்தேர்வாயமை, சோதனையாகச் செயற்படு, (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு, சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
test-bed
n. தேர்வுச்சட்டம், இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம்.
test-glass
n. (வேதி) ஆய்வு நீர்க்கலம், ஆய்வுக்குரிய நீர்மங்கொண்டுள்ள கண்ணாடிக்கலம்.
test-match
n. தொடராக நடக்கும் அனைத்து நாடுகள் போட்டிப்பந்தயங்களுள் ஒன்று.
test-paper
n. (வேதி) வண்ண வேதித்தாள்.