English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
terrestrial
n. நிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற.
terret
n. கோப்பு வளையம், சேணப்பட்டையில் கடிவான வார் புகுந்துசெல்வதற்கான வளையம், கோப்புக்கண்ணி, சேணப்பட்டைக் கடிவாளம் புகுந்து செல்வதற்குரிய எண்ணி.
terrible
a. அச்சந்தருகிற, பயங்கரமான, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, (பே-வ) மட்டுமீறிய.
terribly
adv. அச்சந்தரும் வகையாக, (பே-வ) மட்டுமீறிய.
Terricolae
n. நிலத்துள் வாழ் புழுவினம், மண்புழு இனம்.
terricolous
a. நிலத்தினுள் வாழ்கிற, நிலமீது வாழ்கிற.
terrier
-1 n. அகழ்நாய், உறுதியான கட்டமைப்பும் சுறுசுறுப்புமுள்ள, (வர) வாரக்குடியாண்மைத் தொகுப்பேடு, பண்ணையாட்சியில் குடியாண்மையாளர் மேலாண்மை ஏற்பு விவரத் தொகுப்பேடு.
terrific
a. அச்சமூட்டடுகிற, திகிலுட்டுகிற.
terrify
v. அச்சுறுத்து, திகிலடையச் செய்.
terrigenous
a. மண்ணிலிருந்து தோன்றிய.
territorial
-1 n. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சோத்ந்தவர், (பெயரடை) ஆட்சிப்பரப்புச் சார்ந்த, பெரிய நிலப்பரப்புக்குரிய, மாவட்டத்துடன் வரையறுக்கப்பட்ட, நிலப்பரப்பாட்சியுடைய, நிலப்பரப்பாட்சியுரிமையுடைய, ஆட்சி நிலத்துக்குரிய, நில ஆட்சி சார்ந்த.
territory
-1 n. நாட்டாட்சி எல்லை, நாட்டாட்சிப் பரப்பு, நாட்டாட்சிப் பகுதி, நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, சார்பாட்சி மண்டலம், நகராட்சி எல்லை, நகராட்சிப் பரப்பு, நகராட்சிப்பகுதி, நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, ஆட்சிநிலப்பகுதி, ஆட்சிப்பகுதி, சட்ட உரிமையாட்சி எல்லை, சட்ட உரிமையாட்சிப்பரப்பு, சட்ட உரிமையாட்சிப் பகுதி, பெரும் பண்ணை நில உடைமை, நில உடைமைகளின் தொகுதி, நில உடைமை, நிலப்பகுதி, திணைநிலம், நிலப்பரப்பு, பிரதேசம், நடைமுறைக்களம், செய்திக்குரிய நிலக்களம், வாணிகத்துறையில் பிரஸ்ணிகளின் பயணப்பரப்பெல்லை, பறவையிணையின் பற்றார்வப்பரப்பு.
territotrialism
n. திணையாட்சி முறை, பண்ணை மேலாட்சி முறை, திணையமைப்பு, மண்டல அடிப்படை மீதான அமைப்பு, நாட்டு மீதாட்சி முறைமை, சமய ஆட்சிமீது நாட்டாட்சி மேலுரிமை கொள்ளும் முறை.
terror
n. பேரச்சம், திகில், நடுக்கம், கிலி, நடுக்கந்தருபவர், நடுக்கந்தருவது, (பே-வ) தொந்தரை செய்யுங் குழந்தை.
terror-stricken, terror-struck
a. நடுக்குற்ற, அச்சத்தினால் தாக்கப்பட்ட.
terrorism
n. திகிலாட்சி முறை, கொடுங்கோன்மை, வன்முறையாட்சி.
terrorist
n. கொடுங்கோலாட்சியர், கொடுங்கோலை ஆதரிப்பவர், கொடுஞ்செயற் கோட்பாட்டாளர், கொடுஞ்செயலாளர், கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர், பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர், ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
terrorize
v. திகிலடையச்செய், அச்சுறுத்தி ஆட்சிபுரி, அரசியலில் அச்சூட்டுமுறை கையாளு.
terry
n. மென்மயிர்ச் சடைத்துணி வகை, (பெயரடை) மென்மயிர்ச் சடைத்துணி போன்ற, வெட்டப்படாத அணியிழைச்சடை மடிகளையுடைய மென்மயிர்ச்சடை இழைகளாலான.