English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transfer-ink
n. படியொட்டு மை, ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை.
transfer-paper
n. ஒட்டுத்தாள்.
transferability
n. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை.
transferable
a. மாற்றத்தக்க, மாற்றுரிமை வாய்ந்த.
transferee
n. பணியிடம் மாற்றப்படுவர்.
transference
n. இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம்.
transferor
n. (சட்) பத்திரம் மாற்றிக் கொடுப்பவர்.
transferrer
n. இடமாற்ற ஏற்பாடு செய்பவர், இடமாற்றுபவர், இடமாற்றிக்கொண்டு செல்பவர், மாற்றி வைப்பவர், பணியிட மாற்றுபவர், பணிமாற்,ற ஏற்பாடு செய்பவர்., மாற்றிக் கொடுப்பவர், உரிமை மாற்றீடு செய்பவர், பத்திர மாற்றீடு செய்பவர், படமாற்றொட்டாளர், அச்சுப்படி மாற்றுபவர், பத்திர மாற்றிக் கொடுப்பவர்.
transfiguration
-1 n. தோற்ற மாற்றம், நிலை மாற்றம், தாற்றப் பொலிவுப் பேறு.
transfigure
v. தோற்ற மாற்று, உருமாற்று, உயர்நிலைப்படுத்து.
transfix
v. குத்தி ஊடுருவச் செல், குத்திப் பதித்து வை, குத்தி நிற்கச் செய், விறைந்து நிற்கச் செய், ஊன்றி நிற்கச் செய்.
transfixion
n. குத்தி ஊடுருவுகை, (அறு) அறுவையில் புடைக்குத்தீவு, உறுப்பறுவைக்கு முன் உள்ளிருந்து புறமாக இழைமங்களை அகற்றுவதற்கான பூர்வாங்கச் செயலாக உறுப்பின் குறுக்காகச் செய்யும் வரிக்குத்தீவு.
transform
v. உருமாற்று, தோற்றம், மாற்றுவி, பண்பு மாற்றஞ் செய், அமைப்பு மாறுபாடு செய், பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று, கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு, பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி, மின்னியல் மாற்று, மின்னியல் மாறுபாடுறு, இயல்பு மாறுவி, உருமாறு, தோற்றமாறு, இயல்மாறு, கூறாக்க மாறுபாடுறு, பண்பு மாறுபாடுறு.
transformable
a. உரு மாற்றதக்க, தோற்ற மாற்றத்தக்க, படிமாற்றதக்க, நிலைமாற்றத்தக்க.
transformation
n. தோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
transformed
a. உருமாற்றப்பட்ட, மாறுபடு தோற்றம் வாய்ந்த, படிமாறிய, உருத்திரிபுற்ற,.
transformer
n. உருமாற்றுபவர், தோற்றம் மாற்றுபவர், உருமாற்றுவது, மின்னியல் விசை மாற்றமைவு.
transformism
n. (உயி) உயிரின மலர்ச்சியிடையே இன வகைமாற்றம், (உயி) உயிரின மலர்ச்சியிடையே இனவகை மாற்றக் கோட்பாடு, (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாடு, நுண்ணுயிர்கள் கூட்மைவாகச் சேர்ந்தே உறப்பமைதியுடைய உஸ்ர் உயிரினங்கள் தோன்றுகின்றன என்றும் உயிரியற் கோட்பாடு.
transfromative
a. உருமாற்றும் இயல்புடைய, உறுமாற்றுப் போக்குடைய, உருமாறும் பாங்குவாய்ந்த, உருமாற்றஞ் சார்ந்த.
transfromist
n. (உயி) இனவகை மாற்றக் கோட்பாட்டாளர், (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாட்டாளர்.