English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transceiver
n. வானொலி இருமைக் கருவி, ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி.
transcend
v. எல்லை கடந்து மேம்படு, அனுபவ வரம்பு மீறு, அறிவின் பிடிக்கு அப்பாற் செல், எல்லை கட, வரம்பு மீறு.
transcendental
n. கடந்த தத்துவம், அறிவெல்லை கடந்த கருத்து, அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம், (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த, காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட, காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த, காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான, நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட,. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த, புறநிலை அறிவு தாண்டிய, இயற்கை கடந்த, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவுக் கெட்டாத, அறிவெல்லை கடந்த,பொருண்மை நிலை கடந்த, கனவியலான, எல்லைமீறிக் கருத்தியலான, மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த, (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத, தௌிவற்ற, (பே-வ) புரியாத,. விளங்காத, (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
transcendentalist
n. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாட்டாளர், அனுபவங்கடந்த அறிவு மூலதத்துவ ஆராய்ச்சியாளர்.
transcendentally
adv. எல்லை கடந்து, உச்ச நிலையில்.
transcendently
adv. எல்லை கடந்து, உச்ச நிலையில்.
transcontinental
a. கண்டங்கள் கடந்து செல்கிற.
transcribe
v. பார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
transcriber
n. பார்த்தெழுதுபவர், பார்த்துப் படி செய்பவர்.
transcript
n. எழுத்துப்படி.
transcription
n. படியெடுத்தல்.
transcriptive
a. கைப்படி எடுப்பான.
transculturation
n. இடைமாறுதற் காலப் பண்பு மாற்றம்.
transcurrent
a. குறுக்காய் ஓடுகிற, குறுக்கு மறுக்காகச் செல்லுகிற.
transducer
n. விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
transection
n. குறுக்கு வெட்டு, குறுக்கு வெட்டுப் பகுதி, குறுக்கு வெட்டு முகப்பு.
transept
n. புடைச்சிறை, சிலுவை வடிவான திருக்கோயிலின் குறுக்குக் கைப்பகுதி.
transfer
-1 n. இடமாற்றம், பணியிட மாற்றீடு, தலைமாற்றம், புடைமாற்று, பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு, மாற்றி வழங்கீடு, உடைமை மாற்றீடு, உரிமை மாற்றீடு, பொறுப்பு மாற்றீடு, பத்திர மாற்றீடு, உரிமை மாற்றுப் பத்திரம், பட உருப்பதிவு மாற்றீடு, உருப்பதிவு மாற்றீட்டுப் படம், ஒட்டுப்படம், தாள் மாற்றி ஒட்டக்கூடிய விளையாட்டுப்படம், படைப்பிரிவு மாற்றீட்டு வீரர், மாற்றீட்டுப் பொருள், மாற்றப்படவேண்டிய பொருள், மாற்றப்படத்தக்க சீட்டு.
transfer-book
n. உடைமை-பங்கு முதலியவற்றின் வகையில் மாற்றீட்டுப் பதிவேடு.
transfer-days
n. pl. தேசியப் பொருளகத்தின் இணைப்பு நிதி நாட்கள், இணைப்பு நிதிக் கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சனி ஞாயிறு நீங்கிற வார நாட்கள்.