English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
traitress,
n. காட்டிக்கொடுப்பவள், சதிகாரி.
traject
v. கடந்து இட்டுச்செல், கடந்து கொண்டுசெல், கடக்கச் செய், கடந்து அனுப்பு, இடம் பெயர்த்தனுப்பு.
trajection
n. உந்தீடு, தள்ளிவிட்டனுப்புதல், உளத்தில் உந்துதடப் பதிவீடு.
trajectory,
n. விசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
tram
-1 n. அமிழ் தண்டூர்தி, பொதுவீதிகளில் அமிழ்தண்டவாளத்தின் மீது செல்லும் உந்துகல ஊர்தி, அமிழ் தண்டவாளப் பாட்டை, அமிழ்தண்டவாளம், சுரங்டகச் சரக்கேற்று வண்டி, (வினை) அமிர்தண்டூர்தியிற் செல், அமிழ் தண்டூர்தியிற் கொண்டு செல்.
tram-car,
n. அமிழ் தண்டூர்தி, டிராம் வண்டி.
tram-line
n. அமிழ்தண்டூர்திப்பாட்டை, அமிழ்தண்ட வாளப் பாட்டை.
trammel
n. மும்மடிப்பை வலை, புள்வலை, தொழுமரம், தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை, நீள்வட்ட வரை கருவி,. அகப்பைமாட்டி, இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு, சிறைக்கட்டு, தளைக்கட்டு, (வினை) தொழுமரத்தில் இடு, தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய், கொண்டிக்கட்டை மாட்டு, கால் கட்டிடு, தளையிடு, செயலிடில் தடங்கல் செய்.
trammel-net
n. மும்மடிப் பை வலை.
tramp-pick
n. கடப்பாறை, நெம்புதுடுப்பு.
trample
n. மிதிப்பொலி, காலறைவொலி, மிதிப்பு, மிதிக்குஞ் செயல், (வினை) மிதித்துத் துவை, அறைந்து மிதி, சவட்டி நசுக்கு காலின் கீழிட்டரை, மிதித்து நட, மேலேறி மிதி, முரட்டுத்தனமாய் நட, வெறுப்புடன் நட.
trampler
n. மிதிப்பவர், மிதித்துத் துவைப்பவர், கொடுமைப்படுத்துபவர்.
trampling
n. மிதித்துத் துவைப்பு, மிதித்தரைப்பு, (பெயரடை) மிதித்துத் துவைக்கிற, மிதித்தரைக்கிற.
trampolin, trampoline
n. வீழ்தடுப்புறை, கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் திண்ணுறை மெத்தை.
tramroad
n. அமிழ் தண்டவாளப்பாட்டை, அமிழ் தண்டவாளப் பட்டை.
tramsmutable
a. பொருணிலை மாறுமியல்புடைய, பொருளியல்பு மாற்றத்தக்க, உரு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, நிலை மாற்றத்தக்க.
trancendence, terancendency
n. கடந்த நிலை, அறிவு வஜ்ம்பு கடந்த நிலை, தத்துவங் கடந்த நிலை, விஞ்சிய நிலை, மனவாசகங் கடந்தமை.