English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
touchhole
n. கொளுத்து வாய், பீரங்கிக்குத் தீ வைப்பதற்கேதுவான சிறு தொளை.
touchily
adv. எளிதிற் சினங்கொள்ளு முறையில், வெடுவெடுப்பாக, தொட்டாற் சிணுங்கியாக.
touchiness
n. தொடப் பொறாத்தன்மை, முன் சினம், எரிந்துவிழுந் தன்மை.
touching
a. உருக்கமான, உளங்கனியச் செய்கிற, துயரார்ந்த, பற்றி, குறித்து.
touchlast
n. குழந்தைகளின் விளையாட்டு வகை.
touchpaper
n. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.ட
touchpiece
n. மன்னர் திருக்கை பட்டவர்க்கு முன்பு வழங்கப்பட்ட பதக்கக் காசு.
touchstone
n. கட்டளைக் கல், பொன் வெள்ளி உரைகல்.
touchwood
-1 n. தாய்ச்சி மரம், தாய்ச்சி, விளையாட்டு, சிறுவன் மரத்தைக் தொட்டுவிட்டால் அஹ்னைத் துரத்திப் பிடிக்கக் கூடாதென்ற விதி ஏற்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு வகை.
touchy
a. கூருணர்வுடைய, முன்கோபியான, தொட்டாற்சிணுங்கியான.
tough
n. போக்கிரி, தெருச்சுற்றி வீணன், (பெயடை) கெட்டிப்பான, உரப்பான, நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த, கட்டுறுதியான, ஒடிக்க முடியாத, வெட்ட முடியாத, கட்டுவிடாத, களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற, கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல, கடுந் துணிவுள்ள, எதற்குமஞ்சாத, கடுமுனைப்பான, திண்ணிய வலிமையுள்ள, உரம் வாய்ந்த, விட்டுக்கொடுக்காத, பிடிவாதமுடைய, கடுமைவாய்ந்த, சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத, ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய, துன்பம் விளைக்கிற, கடுமையான, செயற்கடுமையான, மகிழ்ச்சிதாராத, முரடான, கீழ்ப்படியாத, மிகு கலகம் விளைகிற, தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
toughen
v. கெட்டிப்பாக்கு, வலிவுள்ளதாகு, விறைப்பாகு, முனைப்பாக்கு, முனைப்புடையதாகு, கடுமையாக்கு,. கட்டுறுதியாகு, உறுதிப்படு, கடிதாகு, விறைப்பாகு.
toughener
n. கெட்டிப்படுத்துபவா, உரப்பி, கெட்டிப்படுத்துவது.
toughening
n. கெட்டிப்படுத்தல், (பெயரடை) கெட்டிப்படுத்துகிற,
toughness
n. உரப்பு, கெட்டிப்புடைய தன்மை, விடாப்பிடி, உறுகடுமை, கடுமுனைப்பு, பணியா முரட்டுத்தனம்.
toupee
n. பொய்மயிர்த் தொப்பி, தலையின் வழுக்கைப் பகுதியை மூடுவதற்காக அணியும் மயிர்ப்பட்டை.
tour
n. சுற்றுப்பயணம், இன்பச் சுற்றுலா, சிற தொலைப்பயணம், சிறு தொலை நடை, சிறு சூழ்வரவு, குறிக்கோளின்றித் திரிந்துவரும் சிறு பயணம், (படை) போர்ப் பணியில் குறிப்பிட்ட நேரவேலை, தளநிலையத்திற் கழிக்கவேண்டிய கால எல்லை, (வினை) சுற்றுப் பயணஞ் செய், இன்பச் சுற்றுலா வாற்று, சூழ்வரலுறு,நாட்டினுடே சுற்றுலாப் போ.
tour de force
n. ஆற்றற் பரிசோதனை.
tour ing-car
n. சுற்றுலா உந்துகலம்.
touraco
n. வண்ணப் புள், பல்வண்ணசந் சிறகும் முனைப்பான சூட்டுமுடைய பெரிய ஆப்பிரிக்க பறவை வகை.