English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
toss
n. சுண்டீடு, நாணய வகையில் சுண்டியெறிவு, சிங்கம் பட்டு, நாணயச்சுண்டு விளையாட்டு, சுண்டீட்டு முடிவு, குரட்டடி முடிவு, எறிதலைமுடிவு, தலைவெட்டசைப்பு, தலைதிடுநிமிர்வு, தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு, ஏளனக் குறிப்புத் தலையசைப்பு, குதிரைவகையில் தூக்கியெறிவு, பந்து வகையில் எற்றெறிவு, தெறிப்புயர்வு, (வினை) சுண்டியெறி, நாணயத்தைச் சுண்டிப்போடு, திடுமெனத் தலையை வெட்டியசை, எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி, திடுமெனச் செயலாற்று, சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண், தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல், விட்டெறி, சிந்தனையின்றி வீசியெறி, அலட்சியமாகத் தூக்கிப்போடு, பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு, உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி, இப்படியும் அப்படியுமாகப் புரட்டு, மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய், தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய், முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு, படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள், அமைதியின்றி அசைந்தாடிச் செல், வெட்டி ஊசலாடு, கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு, கொழி, புடைத்துப்பிரித்தெடு.
toss-up
n. சுண்டியெறிவு, நாணயச் சுண்டீடு.
tossy
a. அவமதிப்புச் செய்கிற.
tot
-1 n. சிறுகுழந்தை, (பே-வ) மடிடற்றளவு, சிறிதளவு மது.
total
n. மொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு.
totalitarian
n. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
totalitarianism
n. சர்வாதிபத்தியம், சர்வாதிபத்திய ஆட்சிமுறை.
totality
n. முழுமை, பகுபடா நிலை, முழுநிறைவு, கூட்டுமொத்தம்.
totalizator
n. தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு, மொத்தப் பணயத்தொகையை வெற்றிக்குதிரையின் மேல் பந்தயங்கட்டியவர்களிடையே பங்கிடும் பொருட்டு பணயங்களின் எண்ணிக்கையையும் தொகையையுங் காட்டும் அமைவு.
totalize
v. மொத்தமாகத் திரட்டு, மொத்தங் கண்டுபிடி, தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவைப் பயன்படுத்து.
totally
adv. முழுதும், முற்றும், ஒன்றுவிடாமல், மொத்தமாக, பாகுபாடின்றி.
tote
v. கொண்டுபோ, மரத்தடி,-துப்பாக்கி-தளவாட முதலியவற்றின் வகையில் எடுத்துச்செல்.
totem
n. குலமரபுச்சின்னம், இனமரபுக் குறியாகக் கொள்ளப்படும் விலங்கு-தாவரமூஇயற்பொருட் சின்னம்.
totem-post
n. குரமரபுச் சின்னக் கம்பம், குலச்சினங்கள் செதுக்கி அல்லது மாட்டி வைக்கப்படுங் கம்பம்.
totemism
n. இனமரபுச் சின்ன முறைமை, சமுதாயப் பொறுப்புகட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை.
totemist
n. இனமரபுச் சின்னக் குழுவினர்.
totemistic
a. இனமரபுச் சின்னஞ்சார்ந்த.
totering
a. தள்ளாடுகிற, நிலைகொள்ளாத, விழும் நிலையிலுள்ள.
tothsomeness
n. உண்ணுதற்கினிமை, சுவையுடைமை.