English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tourbillion
n. திருகுசுருள் வாணம், சு தீப்பிழம்பெனத் தோன்றுமாறு வானவெளியிற் சுழலும் வாணவெடி வகை.
tourer
n. சுற்றுப் பயணஞ் செய்வதற்குத் தகுதியான நீண்ட உந்துவண்டி.
touring
n. சுற்றுலாப் போக்கு, சுற்றுப்பயணம், (பெயரடை) சுற்றுலா வருகிற, சுற்றுலாவிற்குரிய.
tourism
n. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள்.
tourist
n. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள்.
Tourist home
சுற்றுலா விடுதி
Tourist taxirvan
சுற்றுலா வாடகைச் சிற்றுந்து
tourmalin, tourmaline
n. துவரைமல்லி, பல்வகை மின் திறமிக்க பல்வண்ணக் கனிமப்பொருள் வகை, புட்பராகக் கல்வகை.
tournament
n. திறமைப்போட்டிப் பந்தயக் காட்சி, (வர) வீரப்போட்டிப் போரணியரங்கக் காட்சி.
tournay
n. மணிக்கவிப்பாடை, இருக்கைகளுக்கான முறுக்கு கம்பிளி அச்சுத்துகில்.
tourney
n. போட்டிப் போரணியரங்கக் காட்சி, (வினை) போட்டிப் போரணிக் காட்சிப்போட்டியிற் கலந்துகொள்.
tourniquet
n. குருதித் தடுப்புக்கருவி, அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
tournure
n. வளைவு, உருவரை வளைவு, புறவரித் தொங்கல், உடுப்பின் பின்புறத் தொங்கல் ஒப்பனை.
tousle
v. அல்ங்கோலமாக்கு, செப்பங்கெடு.
tousy
a. பறட்டை மயிருள்ள, செப்பமில்லாத, பம்பையான, தலைமுடிவகையில் ஒழுங்கற்ற.
tout
n. வாடிக்கைத் தேட்டம், தரகு பிடிப்பாளர், இலய மூடாடி, பந்தயக் குதிரை வேவாளி, (வினை) வாடிக்கை பிடி, வற்புறுத்தித் தொந்தரவு செய், பந்தயப்பயிற்சிக் குதிரை விவரங்கள்பற்றி வேவுபார்.
tow
-1 n. கட்டிழுப்பு, கயிறு கட்டியிழுத்தல், கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல், ஆட்டிவைப்பு, ஆட்கொள்கை, (வினை) கட்டியிழு, இழுத்துக்கொண்டுபோ, ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்,வலையை நீரின்மீதான இழு, வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
tow-car
n. மீட்பமைவூர்தி, பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி.
tow-rope,
n. இழுவைக் கயிறு.