English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sentence
n. முற்றுத் தொடர் வாக்கியம், கருத்து, பொருள், கருத்து முடிவு, செய்தி, தீர்ப்பு, தண்டனை அறிவிப்பு, தண்டனை மேற்கோள், கருத்துரை, பழமொழி, (வினை.) தீர்ப்பளி, தண்டனை முடிவுகூறு.
sentential
a. (இலக்.) வாக்கியத் தொடர்பான.
sententious
a. முதுமொழியியல்பான, சூத்திரவாய்பாடு போன்ற, பொருட்செறிவுள்ள, முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய, மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற, எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான, ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
sentience, sentiecny
புலனறிவாற்றல், புலனறிவுடைமை.
sentient
n. புலனறிவுடைய உயிர், புலனறிவுடைய ஆள், சித்தம், புலனறிவார்ந்த மனம், (பெ.) புலனறிவாற்றலுடைய, புலனுணர்ச்சிவாய்ந்த, புறத்தூண்டுதலுக்குரிய அக எதிர்விளைவு காட்டுகிற, தன்னுணர்வுடைய, புறப்பொருள் நிலை உணர்கிற.
sentiment
n. உணர்ச்சிக்கனிவு, ஆர்வமதிப்பு, மென்னய உணர்ச்சி, ஆர்வக்கருத்து, கருத்துப்போக்கு, உள்ளுணர்ச்சிப்பாங்கு, ஆர்வக்கொள்கை, உணர்ச்சிவசப்பட்ட கருத்து, விருப்பார்வம், நன்னயக்கருத்துரை, ஆர்வநல்லுரை, உளப்பாடு, மெய்ப்பாட்டுணர்வு, உணர்வுச்சுவை நஸ்க்கூறு, மென்னயப்புணர்ச்சி, ஆர்வப்பகட்டுணர்ச்சி, கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடு, உணர்ச்சி ஆபாசம்.
sentimental
a. ஆர்வமதிப்புச் சார்ந்த, உணர்ச்சிக்கனிவு காட்டுகிற, உணர்ச்சிவயப்படுகிற, மென்னய உணர்ச்சிப்பாங்கான, உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கிற, கூருணர்ச்சிநயப் பசப்புடைய, மென்னய உணர்ச்சிப்பகட்டான, மட்டற்ற அவல உணர்ச்சிகாட்டுகிற, உணர்ச்சி ஆபாசமான.
sentimentalism
n. உணர்ச்சிக்கனிவு, மென்னய உணர்ச்சிப்பாங்கு, உணர்ச்சி வயப்பட்ட தன்மை, மென்னய உணர்ச்சிக்கூறு.
sentimentalist
n. உணர்ச்சிப்பகட்டாளர், உணர்ச்சிவசப்பட்டவர், உணர்ச்சிகனிவாளர், பசப்புணர்ச்சியாளர், மென்னய உணர்ச்சிக்கலைஞைர், கூருணர்ச்சிநய ஈடுபாட்டாளர்.
sentimentality
n. உணர்வார்வக்கருத்து, மென்னய உணர்ச்சி ஈடுபாடு, உணர்ச்சிப்பசப்பு, கூருணர்ச்சி நயப்பகட்டு, மட்டற்ற உணர்ச்சி நயத் தோய்வு, சிணுங்குதல், அழுங்குதல்.
sentimentalize
v. உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள், மேலீடான மன உணர்ச்சிகளால் திளை, உணர்ச்சிவயப்படச் செய், கலைத்துறையில் உணர்ச்சிநயப்பாங்கு மேற்கொள்.
sentinel
n. படைகாவற் போர்வீரன், காவலாள், நீண்ட தூண்டிழைக்கணணுடைய நண்டுவகை, (வினை.) படைக்காவல்செய், இடங்காத்து நில், படைக்காவற் போர்வீரர்களை நிறுத்து.
sentry
n. காவலாள், படைகாவற் போர்வீரன்.
sentry-board
n. கப்பலில் காவலாள் நிற்கும் மேடை.
sentry-box
n. காவல்வீரர் நிலையம்.
sentry-go
n. முறை காவல், காவலர் கடமைச்சுற்று.
Senussi
n. வட ஆப்பிரிக்க இஸ்லாமிய சமய-அரசியல் கூட்டுக்குழு.
senza tempo
adv. (இசை.) கால அளவுக் கட்டுப்பாடு இல்லாமல்.
sepal
n. (தாவ.) புல்லி, புறவிதழ்.