English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sensibility
n. ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை.
sensible
a. புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த.
sensitive
n. வசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
sensitiveness
n. கூச்சம், கூருணர்வுத்திறம், உணர்வுநுட்பம், மட்டற்ற உணர்ச்சி மென்மை, கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம், விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை.
sensitivity
n. கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு.
sensitization
n. பதிவுதிற நுட்பப்பாடு, கூருணர்ச்சிப் பாடு.
sensitize
v. கூருணர்ச்சிப்படுத்து, கூருணர்ச்சி, மேம்படுத்து, திறநுட்படுத்து, திறநுட்பம் பெருக்கு, நுண்விசைப்படுத்து, நுண்விசை பெருக்கு.
sensitizer
n. கூருணர்ச்சிபடுத்துபவர், பதிவுதிற நுட்பம் தூண்டும் விசை.
sensitometer
n. பதிவுமானி, நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி.
sensorium
n. உடலின் உணர்ச்சிமையம், மூளை, மூளையின் சாம்பல்நிறப் பொருள், மூளைத் தண்டுவடமுனை, (வில.) நரம்பு மண்டலம் உள்ளிட்ட முழு உணர்வுக் கருவிகள்.
sensory
a. உணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய.
sensual
a. புலன் மட்டுமே சார்ந்த, புலனுணர்வு மட்டுமேபற்றிய, புலனுணர்வுக்கு ஆட்பட்ட, இழிதகு புலனுகர்ச்சிக்குரிய, புலன் சார்ந்த சிறுதிற இன்ப ஈடுபாடுடைய, இழிதகை இன்பவாழ்வில் தோய்ந்த, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு சார்ந்த, கருத்துக்கள் அனைத்தும் புலன்களாலே ஏற்படுகின்றன என்னுங் கோட்பாட்டை மேற்கொண்ட.
sensualism
n. புலனின்பத் தோய்வு, இழிதகு புலனின்ப ஈடுபாடு, புலனின்பங்களுக்கு ஆட்படுதல், புலனுணர்வுக்கூற்றின் வற்புறுத்தீடு, அறத்துறையில் புலனுகர்வு நலக்கோட்பாடு, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு.
sensualist
n. புலனின்பவாணர், தசையின்ப நோக்கினர், புலனின்பநலக் கோட்பாட்டாளர், புலனடி அறிவுக் கோட்பாட்டாளர்.
sensuality
n. புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு.
sensualization
n. புலனின்பத்திற்கு உட்படுத்துதல், உடலின்பம் வற்புறுத்தும் இழிதகவு, உலோகாயதமயமாக்குதல், புலனடி மூல விளக்கமளி.
sensualize
v. தோலின்பமுறுவி, உடலின்பம் வற்புறுத்தி இழிதகவுப்படுத்து, உலோகாயதமாக்கி அமை, புலனடி மூலம் காட்டி விளக்கமளி.
sensuous
a. புலனுணர்வை ஆட்கொண்ட, புலனுணர்வை அடிப்படையாகக் கொண்ட, புலனாற்றல்களுக்கு உட்பட்ட, புலனுணர்வைப் பாதிக்கிற, புலனுணர்வால் எளிதில் பாதிக்கப்பெறுகிற, புலனறிவு சார்ந்த, புலக்காட்சி உணர்ச்சி ஊட்டுகிற.
sensuousnes
n. தசையின்ப மகிழ்வு.
sent
v. செண்ட் (1) என்பதன் இறந்த காலம்.