English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
senna
n. மலமிளக்கு மருந்தாகப் பயன்படும் நிலவாவிரை இனச் செடிவகை.
sennet
n. (வர.) நாடகமேடை அடையாளக் குழலொலி.
sennit
n. (கப்.) முறுக்கிய வடக்கயிறு.
senocular
a. ஆறு விழியுடைய.
senor
n. திரு, திருவாளர்.
senorita
n. செல்வி, திருமணமாகாத மகளிர் பெயர்முன் அடைமொழி.
sensation
n. ஊறுகோள் உணர்ச்சி, தொட்டறிவு, உடல் மேற்பட்டறிவு, ஊருதல் உணர்வு, புலனுணர்வு, உளப்பாடு, உளத்திற்படும் உணர்ச்சி, தனி உணர்ச்சிப்பாங்கு, தனிப்பட்ட தோருணர்ச்சி, தனி அனுபவநிலை, உணர்வுக்கிளர்ச்சி, பரபரப்பு, பரபரப்புக் காட்டுதல், கிளர்ச்சி தூண்டுதல், பரபரப்பூட்டுஞ் செய்தி, பரபரப்பினால் ஏற்படும் நிலை, சலசலப்புநிலை, கலவரநிலை, கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
sensational
a. பரபரப்பூட்டுகிற, மனவெழுச்சியைத் தூண்டுகிற.
sensationalism
n. அரசியல் கிளர்ச்சிப்பாங்கு, கிளர்ச்சி நாட்டம், இலக்கியத்துறையில் எழுச்சியூட்டும் பாணி, (மெய்.) புலனடி அறிவுக்கோட்பாடு, புலனுணர்வு உணர்வெழுச்சி அடிப்படையாகவே கருத்துக்கள் ஏற்படுகின்றன என்னுங்கோள்.
sense
n. புலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
sense-body
n. உயிரின வகைகளின் உடற்பகுதியில் உள்ள தனிப்புல உணர்விற்குரிய தொகுதி.
sense-capsule, sense-cavity
n. உயிரினங்களில் தனிப்புலனுணர்வு நரம்புகளின் காப்புப் பொதிவு.
sense-cell
n. புலனுணர்வுறுப்பு உயிர்மம்.
sense-centre
n. புலனுணர்வு மையம்.
sense-organ
n. பொறியுல உறுப்பு.
senseless
a. அறிவற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, உணர்வில்லாத.
senselessly
adv. அறிவின்றி, பகுத்தறிவில்லாமல்.
senses
n. pl. இயலறிவுநில, நல்லுணர்வுநிலை, நேர்உணர்வு.
sensibilities
n. pl. எளிதில் ஊறுபடத்தக்க உணர்ச்சிக்கூறுகள்.