English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
semipermeable
a. சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற.
semiquaver
n. (இசை.) தற்கால இசைமானத்தில் வீசம் மாத்திரை.
Semite
n. விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர், செமிட்டிக் இனத்தவர், யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர், (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த, யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த.
Semitic
a. செமிட்டிக் இனஞ் சார்ந்த, யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப்பேரினஞ் சார்ந்த.
semitone
n. (இசை.) அரைச்சுர அலகு, ஐரோப்பிய இசையில் வரும் மிகச்சிறு சுர இடைவெளி.
semitransparent
a. அரைகுறைப் பளிங்கியலான, ஒளி ஓரளவு ஊடுருவிச் செல்கிற, அரைகுறையாத் தெரிகிற.
semitropical
a. வெப்பமண்டலங்களின் ஒரப்பகுதிகளைச் சார்ந்த.
semitubular
a. நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான.
semivowel
n. அரையுயிர் எழுத்து, மெய்களிடையே அரை அங்காப்புடைய இடையின எழுத்து.
semmit
n. ஸ்காத்லாந்த நாட்டு உட்சட்டை.
sempiternal
a. (செய்.) என்றுமுள்ள, அழியாத, முடிவில்லாத.
semplice,
int. (இசை.) எளியமுறையில் இயங்குக.
sempre
adv. (இசை.) கட்டளைக்குறிப்பு வழக்கில் முழுதுறழ்வாக.
semsester
n. பல்கலைக்கழகங்களில் அரையாண்டு வகுப்பு, பயிற்சிக்கால அரையாண்டுப் பருவம்.
sen
n. ஜப்பானிய செப்பு நாணயம், 'யென்' என்னும் நாணயத்தின் நுற்றிலொரு பகுதி.
senarius
n. அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள்வகை.
senary
n. ஆறன் தொகுதி, அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள் வகை, (பெ.) ஆறு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட, ஆறு ஆறாக எண்ணுதற்குரிய, ஆறு என்னும் எண்ணெ உட்கொண்ட.