English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
separable
a. பிரித்து வேறாக்கக்கூடிய, பிரியக்கூடிய, இணைப்பகற்றக்கூடிய, வேண்டும்போது பிரித்துக்கொள்ளக்கூடிய.
separate
n. துணக்குப்படி, (பெ.) துண்டிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, தனிப்பட்ட, உதிரியான, தனிவேறான, தனித்தனியான, தனி ஆள்கள் பற்றிய, (வினை.) பிரித்து வேறாக்கு, பிரித்துவை, துண்டுபடுத்து, கூட்டுப்பிரி, விலகியிரு, விலகு, பிரிந்து போ, வெவ்வேறு வழிகளிற் செல், கலைந்துசெல், கூறுகளாகப் பிரி, வகைப்படுத்து, பாலினின்றும் ஏடு பிரித்தெடு.
separately
adv. தனித்தனியாக, வெவ்வேறாக.
separation
n. பிரிதல், பிரிவு, பிரிவினை, கூட்டுப்பிரிதல், தனிநிலை, கூட்டுக்கலைவு, வேதியியல் கூறுபாடு, மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு, வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
separatism
n. கூட்டாட்சியமைப்பு வகையில் பிரிவினை ஆதரவு, பிரிவினை, பிரிவினை மனப்பான்மை, நிலைபெற்ற திருச்சபை வகையில் பிரிந்து செல் விருப்பம், பிரிந்து செல்லுதலுக்கு ஆதரவு, எதிர்ப்பு மனப்பான்மை, கிரேக்க இதிகாசப்பகுதிகள் வகையில் தனித்தனி ஆக்கியோர் நம்பிக்கை.
separatist
n. பிரிவினையாளர், கூட்டாட்சி ஆதரவாளர் வழக்கில் தனியாட்சிக் கோரிக்கையாளர், நிலைபெற்ற திருச்சபையிலிருந்து பிரிந்து செல்பவர், பிரிவினை ஆதரவாளர், நிலைபெற்ற திருச்சபையினின்று பிரிவதை ஆதரிப்பவர், கூறாக்கக் கோட்பாட்டாளர், கிரேக்க இதிகாசங்களின் பகுதிகள் வகையில் தனித்தனி ஆக்கியோர் ஆக்கக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர், (பெ.) கூட்டாட்சியமைப்பு அல்லது நிலைபெற்ற திருச்சபை வகைகளிற் பிரிந்து செல்கிற, பிரிவினையை ஆதரிக்கிற, தனிஆட்சிக் கோரிக்கைக்கு ஆதரவான, பிரிவினையாளரின் தனிச்சிறப்பியல்புகட்குரிய, கிரேக்க இதிகாசப்பகுதிகள் வகையில் தனித்தனி ஆக்க நம்பிக்கையுடைய.
separative
a. பிரிந்து வேறாகும் பாங்குடைய.
separator
n. பிரித்து வேறாக்குபவர், இடையீட்டுப்பிரிவு, பிரித்து வேறாக்குவது, பால்கடை கருவி, பாலாடை எடுக்குங் கருவி.
separatory
n. பிரித்து வேறாக்குவதற்கான கருவி, (பெ.) பிரித்து வேறாக்கும் இயல்புடைய.
Sephardi
n. ஸ்பானிய யூதர், போர்ச்சுக்கீசிய யூதர்.
sepia
n. கணவாய்மீன் வெளிப்படுத்தும் கருமை நீர்மம், கணவாய்மீன் நீர்மத்திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிறமை.
sepia-drawing
n. பழுப்புவண்ண வகை ஓவியம்.
sepoy
n. இந்தியப் போர்வீரர்.
seps
n. பண்டைக்கிரேக்க வழக்கில் நச்சுப்பாம்பு வகை, குறுங்காற் பல்லியின உயிர்வகை.
sepsis
n. ஊறு நச்சுப்பாடு, காயத்தினால் ஏற்படும் ஊழ்ப்பு, சீழ்த்தொற்று, அழுகல் நிலை, குருதிநச்சுப்பாடு.
sept
n. இனவழிக் கிளைக்குழு, அயர்லாந்தில் பழங்குடியின உட்பிரிவு.
septal
a. அயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவெளியில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த.
septan
a. (மரு.) காய்ச்சல் வகையில் ஏழுநாளுக்கு ஒருமுறை வருகிற.
septangle
n. (வடி.) எழுகட்டம், எழுகோண வடிவம்.
septangular
a. (வடி.) எழுகட்டமான, எழுகோண வடிவமான.