English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
septimus
a. ஆண்பள்ளியில் ஒரே பெயரையுடைய பல மாணவர்களுள் ஏழாமவரான.
septisyllable
n. ஏழசைச்சொல்.
septuagenarian
n. எழுபதாட்டையர், அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய.
septuagenary
a. எழுபது சார்ந்த.
Septuagesima, Septuagesima Sunday
n. கிறித்தவ மீட்டெழு விழாவிற்கு முந்திய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
septuagint
n. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம்.
septum
n. (உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
septuple
n. ஏழுமடங்களவு, எழுமடித்தொகை, (பெ.) எழுமடங்கான, (வினை.) ஏழினால் பெருக்கு, ஏழுமடங்கு அதிகமாக்கு, ஏழுமடங்கு மிகுதியாகு.
sepulchral
a. கல்லறை சார்ந்த, சமாதிக்குரிய, கல்லறையைநினைப்பூட்டுகிற, இழவு வினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, மகிழ்வற்ற.
sepulchre
n. கல்லறை, சமாதி, சவக்குழி, பிணம் புதைப்பதற்கான நிலவறை, (வினை.) கல்லறையில் கிடத்து, கல்லறையாகப் பயன்படு.
sepulture
n. புதையீடு, கல்லறையடக்கம்.
sequacious
a. பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற, தாழ்வு மனப்பான்மையுள்ள, ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள, ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
sequacity
n. பின்பற்றிச் செல்லும் பாங்கு, தொடர்பிசைவுநிலை.
sequel
n. பின்கூறு, தொடர்பகுதி, கதைப்பின்தொடர்ச்சி, கதைப்பின்னொட்டுத் தொடர்ச்சி, பின்வரல் விளைவு, தொடர்விளைவு, தொலைவிளைவு, வாத இறுதிமுடிபு.
sequela
n. (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி.
sequence
n. நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
sequent
n. பின்தொடர் நிகழ்வு, (பெ.) பின்வருகிற, வரிசைமுறையிலுள்ள, அடுத்து வருகிற, பின்விளைவாயுள்ள, தொடர்ச்சியான, இடையறாது தொடர்கிற.
sequentes, sequentia
பின்வருவன, இன்னும் பின்வருஞ் செய்திகள், பின்வரும் வரிகள், பின்வரும் பக்கங்கள்.
sequential
a. வரிசைமுறையான, ஒன்றையொன்று பின் தொடர்கிற, தொடர்விளைவான, காரணகாரியமாகத் தொடர்கிற, இடையறாத் தொடர்பான, வரிசைப்பண்புவாய்ந்த, வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட, வரிசைத் தொடரியலான, தொடர்வரிசையாக உருவாகிற, விளைபயனான.
sequentiality
n. வரிசைத்தொடர்புடைமை, தொடர்வரிசைப்பண்பு, தொடர்விளைவுப் பண்பு, தொடர்விளைவு நிகழ்ச்சி, தொடர்பயன்விளைவு.