English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scoundrel
n. கயவன், போக்கிரி. ஓழுக்கமிலி.
scount
-2 v. வெறுத்தொதுக்கு, பரிகசி, அவமதித்து உதறு.
scour
-1 n. கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம், கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு, ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள், (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து, உரசிப் பளபளப்பாக்கு, கால்வாய் துப்புரவு செய், துறைமுகம் தூர்வுசெய், குழாய் தூய்மைப்படுத்து, குடலை நன்றாகக் கழுவு.
scourer
n. தேய்துத் துப்புரவாக்குபவர், தேய்த்துத் துப்புரவாக்கும் கருவி, தேய்த்துத் துப்புரவு செய்வதற்குரிய மணை, பேதி மருந்து.
scourge
n. சவுக்கு, சாட்டை, கசை, தெய்வதண்டனைக்குரிய கருவி, தெய்வதண்டனைக்குரிய கருவியாய் அமைபவர், தெய்வதண்டனையாய்க் கருதப்படுங் கொள்ளைநோய், (வினை.) சாட்டையாலடி, தண்டி, அடி, துன்புறுத்து, கொடுமைக்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, தொல்லைப்படுத்து.
scouring-rush
n. தேய்ப்புத் துரிசாகப் பயன்படும் புதர்.
scout
-1 n. சாரணர், ஒற்றர், உளவாள, வேவுகாணி, படைத்துறையில்எதிரியிடமிருந்து புலங்காண முயல்பவர், செய்தி சேகரிப்பவர், சுற்றுக்காவலர், திரிகாவலர், வேவுக்கப்பல், விரைதிரிவு விமானம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வழக்கில்கல்லுரிப் பணியாள், மரப்பந்தாட்டத்தில் களக்காவலர், கடற்பறவை வகை, (வினை.) சாரணர் பணிசெய்.
scoutmaster
n. சாரணர் தலைவர், குருளையரின் ஆசிரியர்.
scowl
n. முகச்சுளிப்பு. சுண்டிய முகத்தோற்றம்,சீற்றம், சிடுசிடுத்த பார்வை, (வினை.) சிடுசிடுப்புக்கொள், சீற்றமுகங்காட்டு, முகஞ்சுளி.
scowlingly
adv. கடுகடுப்புடன், சீற்றத்தோடு.
scrabble
v. கிறுக்கித்தள்ளு, படபடத்துத் தேடித்தடவு, பரபரப்புடன் கொள்ளக் கைநீட்டித்தழாவு.
scrag
n. ஒற்றைநாடியனாவர், மிக ஒல்லியானவர், எலும்புதோலானவர், ஒட்டிமெலிந்த விலங்கு, வாடலான தாவரம், தசை குறைந்த எலும்புத்துண்டு, ஆட்டுக்கழுத்திரைச்சி, ஆட்டிறைச்சியின் மோசமான கூறு, (வினை.) தூக்கிட்டுக்கொல், கழுத்தை நெரித்து வதை, கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு, உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து.
scragginess
n. ஒடுசல்லியான தன்மை.
scraggy
a. ஒடுசல்லியான, ஒல்லியான, குறுக்கு மறுக்கான.
scrakp-iron, scrap-metal
n. கழிப்பிரும்பு, மறு உருக்கீட்டிற்குப் பயன்படும் இரும்பு.
scram
int. (பே-வ) போவெளியே, அப்பாற்செல்.
scramble
n. தொற்றி, ஏறுகை, பற்றிப்பிடித்து முன்னேறுகை, இறாஞ்சுகை, பற்றிப் பிடிப்புப்பேரவா, போட்டி, முந்து போராட்டம், மோட்டார் வெள்ளோட்ட வகை, (வினை.) தத்தித் தடவி ஏறு, தட்டித் தடவி முன்னேறு, இறாஞ்சு, மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை, நெருக்கியடித்துப்போட்டியிடு, பிடிவலி கூட்டிப்போராட, உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல், தட்டித் தடவிப் பொறுக்கு, தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி, முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
scrambling
a. தாறுமாறான, ஒழுங்கற்ற, குழப்பமான.