English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scorcher
n. எரியூட்டுபவர், பொசுக்குபவர், மிதிவண்டி அல்லது உந்துவிசையில் தலைதெறிக்க விரைபவர், மிதிவண்டி அல்லது உந்துவிசையைத் தெறிக்க ஓட்டுபவர், (பே-வ) மாதிரிப்பொருள்.
scorching
a. வாட்டுகிற, மிகுவெப்பமான, சுடுகிற, அழிவு செய்கிற.
scorchingly
adv. பொசுக்குகிற முறையில்.
score
n. வடு, வெட்டுக்குறி, கீற்றுக்குறி, அடிப்புக்கோடு, அழிப்புவரை, அடித்த தழும்பு, இடவரைக்குறி, பந்தயங்களில் தொடங்கிடக்குறி, நிற்கும் இடக்குறி, கணிப்புருக்குறி, கணிப்புக்கீற்றுக்குறி, கடன் பொறுப்பு, கடன் பொறுப்பாண்மை, கணிப்புத் தலைப்பு, கணிப்பு அடிப்படை, ஆட்டக்கணிப்பு எண், ஆட்டக்கணிப்பெண் பதிவு, ஆட்டக்கணிப்புப் பதிவேடு, மரப்பந்தாட்டக் கணிப்பெண் குறிப்பு, கெலிப்பு எண், கெலிப்பு முடிவெண், மிகைபாட்டு எண், வென்று மேம்பாடு அளிக்கும் செய்தி, நற்பேறுடைய செய்தி, இருபதின் தொகுதி, 20 அல்லது 21 பொன்கொண்ட தொகை, நிலக்கரிவகையில் 20 முழ்ல் 26 வரை மிடா அளவு, (இசை.) வரைவகுப்புக் குறியீடு, (இசை.) வரைக் குறியீட்டு வகுப்பிசை, (வினை.) வடுச்செய்,வெட்டுக்குறியிடு, வரைகிழி, வரைகீறமி அடித்துவிடு, கரி அல்லது சுண்ணங்கொண்டு கீற்றுக்குறியிடு, உள்வரியிடு, சால்வரியிடு, அடித்துத்துவை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புப் பதிவி, கெலிப்பெண் பெறு, பதிவுசெய், வெற்றி மதிப்புப் பெறு, வெற்றி எய்தப்பெறு, செய்துமுடி, விஞ்சு, சாதகநிலை பெறு, நற்பேறடை, கணித்தெண்ணு, பற்றெழுது, குறைகளைமனத்தில் குறித்துவை, கருவிக்கிசைய இசைக்குறியீடு எடுத்தெழுது, கருவிக்கிசைய இசைக்குறியீடு மாற்று.
score-book
n. கெலிப்புப்புள்ளிகள் பதிவேடு.
score-card
n. கெலிப்புப்புள்ளிப் பதிவு அட்டை.
score-sheet
n. கெலிப்புப்புள்ளித் தாள்.
scoria
n. ஆவிப்புழைகளையுடைய எரிமலைக்குழம்புப்பொருள், உட்கண்ணறைகளையுடைய எரிமலைகுழம்புப் பாறைத்துண்டு, உலோக உருக்குக்களக் கசடு.
scorification
n. உலோகமாசாக்குதல், ஈயம் வெங்காரம் சேர்த்து உலோகக் கனிப்பொருளின் மாற்றுத்தேர்வு.
scorifier
n. ஈயம் வெங்காரம் கலந்து உலோக மாற்றுத் தேர்பவர்.
scorify
v. உலோக மாசாக்கு, ஈயம் அல்லது வெங்காரத்தை உயர் உலோகத்தாதுவின் கூற்றோடு கலந்து மாற்றுத் தேர்வுசெய்.
scorn
n. இகழ்ச்சி, ஏளனம், வெறுப்பு, அவமதிப்பு, இழிவு, ஏளனப்பொருள், (வினை.) ஏளனஞ்செய், இகழ்ச்சிக்குரியதாகக் கருது, வெறுத்தொதுக்கு, தகாததெனத் தள்ளு.
scorner
n. இகழ்பவர், வெறுத்தொதுக்குபவர், தகாதென மறுப்பவர்.
scornful
a. ஏளனஞ் செய்கிற, வெறுத்தொதுக்குகிற, இகழ்ச்சியான, இறுமாப்புடைய.
scornfulness
n. ஏளன வெறுப்புடைமை.
Scorpio
n. விருச்சிக ராசி, தேளுரு வான்மனை.
scorpioid
n. (தாவ.) தேளின் கொடுக்குப்போன்ற மலர்க்கொத்துக்கூம்பு, (பெ.) (தாவ.) செடி வகையில் தேளின் கொடுக்குப்போல் மேல்நோக்கிச் சுருண்ட மலர்க்கூம்புடைய.
scorpion
-1 n. தேள், உலோகமுட்கள் உட்பதித்த சாட்டை, பண்டைக் கொட்டைக் கவணெறி பொறிவகை.
scorpion-broom
n. மஞ்சள் நிற மலரையுடைய புதர்ச்செடிவகை.
scorpion-fish
n. தலையிலும் செதில்களிலும் முள்ளுடை மீன்வகை.