English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scolopendrium
n. சூரல் வகை.
scomber
n. கானாங்கெளுத்தி, கானாங்கெளுத்தியின் மீன் வகை.
sconce
-1 n. மெழுகுத்திரி, மெழுகுவர்த்தி விளக்கு.
scone
n. முக்குவடை, கோதுமை அல்லது வாற்கோதமை மாவால் குழி இரும்புத் தட்டில் வேவிக்கப்படும் முக்கோண வடிவான பண்ணியவகை.
scoop
n. சட்டுவக்கரண்டி, வார்குவளை, கோப்பைக்கரண்டி, அறுவை குடைவுக்கருவி, பாலேடு அருந்து கரண்டி, கரித்தட்டு, கரிவாரும் கூடை, கொள்ளைலாபம், போட்டிக்கு முந்துபேராதாயம், பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி, முந்து செய்தி, (வினை.) அள்ளி எடு, வாரி எடு, கோரி எடு, முகந்தெடு, குடைந்தெடு, சூர்ந்தெடு, உட்குடைவாக்கு, விரைகொள்ளை ஆதாயமடி, போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை, பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
scoop-net
n. தூர்வாரி வலை, ஆற்றடியை வாரிப்பெருக்கும் வலை, நீள்பிடித் தூண்டில்வலை.
scoop-wheel
n. சூழ்தொட்டிகளால் நீரிறைக்கும் சக்கரப் பொறி.
scooper
n. குடைந்தெடுப்பவர், குடைந்தெடுப்பது, மொண்டெடுப்பவர், மொண்டெடுப்பது, செதுக்குக் கலைஞர் கருவி, நீள் அலகுச் சதுப்புநிலப் பறவை.
scoot
n. பாய்ச்சல், விரைசெயல், (வினை.) ஓடு, சாடு, பாய்ந்துசெல், சரேலென்று செல்.
scooter
n. மோட்டார் சைகிள், சிறுவர் மிதிவண்டி, நீர்ப்படகு.
scopa
n. மயிர்க்கற்றை, தேனீக்கள் வகையில் பூந்துகளைக் கொண்டுசெல்லும் காலடி மயிர்த்தூரிகை.
scopate
a. மயிர்க்கற்றை கொண்ட, மயிர்க்கற்றை போன்ற.
scope
n. நோக்கம், குறியிலக்கு, நோக்கெல்லை, குறியிலக்கெல்லை, காட்சிப்பரப்பு, காட்சிப்பரப்பெல்லை, செயற்பரப்பு, செயற்பரப்பெல்லை, வாய்ப்பெல்லை, தங்குதடையற்ற செயல் உரிமை, கப்பல் சிறிது புடைபெயர்ந்தியங்குதற்கு இடந்தரும் நங்கூரக் கம்பிவடம்.
scopiferous
a. மயிர்க்கற்றை தாங்கிய.
scopiform
a. மயிர்க்கற்றை வடிவான.
scopula
n. மயிர்க்கற்றை, பூந்துகள் கொண்டுசெல்லும் தேனீயின் காலடி மயிர்த்தூரிகை, சிலந்தியின் ஆம்பி இழை, நுற்கும் சிலந்தியின் காலடி மயிர்த்தூரிகை.
scopulate
a. மயிர்த்தூரிகை போன்ற.
scopuliform
a. மயிர்த்தூரிகை வடிவான.
scorbutic
n. சொறி நோயாளி, சொறிகரப்பான் பிடித்தவர், (பெ.) பற்றாக்குறையினால்வரும் வயிறுவீக்கம் சொறிகரப்பான் முதலியவற்றுக்கு ஆளான, சொறிகரப்பான் பிடித்த.
scorch
n. கால்கொப்புளிக்கும் வெயில், மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை, (வினை.) கொப்புளிக்க வை, வாட்டு, தீயிலிட்டுக் கருக்கு, கரியாக்கு, சுட்டுப்புண்ணாக்கு, சூட்டினால் வெதுப்பு, வாட்டி வேதனைசெய், வறட்டு, வதங்குவி, விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு, போரில் எதிரிக்குப் பயன்படாதழி, மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு, மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.