English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scrawl
n. கிறுக்கல், கிறுக்கல் எழுத்து, மோசமான எழுத்து, அவசர அவசரமாக எழுதிய குறிப்பு, அவசரக் கடிதம்(வினை.) கிறுக்கித்தள்ளு, விளங்காத வகையில் எழுது, மோசமான எழுத்துக்களால் நிரப்பு, சிறுக்கல் வரைகளால் நிரப்பு.
scream
n. அலறல், அலறொலி, அலறுங்குரல், திடீர்க்கூச்சல், அச்சக் கூக்குரல், வேதனைக்கூக்குரல், உரத்த நகைப்பொலி, இபூர்தியின் விசை ஊதல் ஓசை, தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி, எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல், (வினை.) அலறு, அதிர்குரல் எப்பு, திடீர்க் கூச்சலிடு,அச்சக் கூக்குரலிடு, வேதனைக் கூக்குரல் எழுப்பு, கிறீச்சிடு, இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய், கட்டுக்கடங்கா வகையில் சிரி, அலறுங் குரலில் கூறு, உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு, உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது, அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
screamer
n. அலறுவோர், அலறுவது, கதறுவது, வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர், முள்போன்ற இறகுடைய பறவை வகை, அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை, உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு, இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி.
screaming
a. அலறுகிற, கிறீச்சிடுகிற.
screamingly
adv. அலறிக்கொண்டு, கதறியபடி, கிறீச் சிட்ட குரலில்.
screamy
a. அலறும் இயல்புடைய, அலறும்பழக்கமுடைய, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய, உணர்ச்சிக்கொந்தளிப்பு ஊட்டுகிற, கட்டுக்கடங்காச் சிரிப்புடைய, அடக்க முடியாச் சிரிப்பூட்டுகிற, அலறுங் குரலில் கூறப்பட்ட.
scree
n. மலையடிவாரக் கல்மண் கூளச்சரிவு, மலைப்பக்கச் சறுக்கு கற்கூளம், சறுக்கு கற்கூளங்களையுடைய பக்கச் சரிவு.
screech
n. கிறீச்சொலி, கூக்குரல், அச்சக் கூவிளி, வேதனைக் கூக்குரல், கோபக்கத்தல், ஊளைக் கூக்குரல் (வினை.) கிறீச்சொலி செய்.
screech-owl
n. கோட்டான், தீச்செய்தி கொண்டுவருவோர்.
screed
n. கந்தை, கிழிவு, சிலும்பல், ஓரம், துணுக்கு, நீளுரை, நெடுங்குறைக்கடிதம், பாவுமேதல்வரிப்பலகை, பாவுமேல்வரிப்பட்டி.
screen
n. தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு.
Screen printing
திரையச்சீடு
screen-wiper
n. கண்ணாடி துடைப்பான், மோட்டார் முகப்புக்கண்ணாடித் துடைப்பமைவு.
screenings
n. pl. சல்லடைக்கழிப்பு.
screeve
v. சாலை ஓவியம் வரை, இரப்புக் கடிதம் எழுது.
screever
v. சாலை ஓவியர், சாலை ஓவிய இரப்பர்.
screw
n. திருகாணி, திருகுசுரை, மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை, திருகுவிசை, புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல், முறுக்காற்றல், வல்லடி வற்புறுத்தாற்றல், புரிவிசைக்கருவி, முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி, திருகு நெட்டி வாங்கி, கப்பலின் புரிவிசையாழி, விமானச் சுழல் விசிறி, புரிவிசை இயக்கக்கப்பல், திருக்கு, திருகுதல், ஒரு சுழற்சி, பந்தின் சுழல்விசை, சுழல் வியக்கம், தாள் பொட்டலக் குவிசுருள், குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள், புகையிலைச்சுருள், கட்டுக் குலைந்த குதிரை, சம்பளத்தொகை, கஞ்சன், கசடி, கசக்கிப்பறிப்பவர், மூளை இணைப்புக்கூறு, (வினை.) திருகாணியால் இறுக்கு, திருகாணி இயக்கு, திருகி இறுக்கு, திருகாணி வகையில் திருகு, திருகாணிபோல் இயக்கு, யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு, திருக்கு, சுழற்றித்திருப்பு, திடுமெனத்திருப்பு, கோட்டுவி, உருத்திரியப்பண்ணு, சுரிக்கச்செய், முறுக்கு, வலுவேற்று, விசைத்திறம் பெருக்கு, செயலுக்கு ஒருக்கமாக்கு, பந்துவகையில் சுற்றிச் சுழலுவி, சுழன்று சுழன்று செல், வழிபிறழ்ந்து செல், திருகத்தக்கதாயிரு, சுற்றிச்செல், சுற்றியணை, மாற்றியமைத்துக்கொள், நெருக்கி வலியுறுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, வலிந்து இணங்குவி, கசக்கிப்பிழி, திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு, கசடு, கஞ்சத்தனம் பண்ணு.
screw-bolt
n. திருகு மரையாணி.
screw-jack
n. பல் மருத்துவரின் பல்நெருக்கு கருவி, வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகுநிலை உதை கோலமைவு.