English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
storekeeper
n. சரக்கறைக் காவலன், பண்டகசாலைக் காப்பாளன், விற்பனைக் கடையாள், விற்பனையாகாச் சரக்கு.
stores
n. pl. தனிப்பொருட் சேமக் குவை, பயனீட்டுச் சரக்குக் குவை, வழங்கீட்டுப்பொருள் சேகரம்.
storey
n. மாடி நிலை, கட்டிடத்தின் அடுக்கு.
storey-post
n. தளக்கால், மேல்தளம் அல்லது மேல்தளச் சுவரைத் தாங்கி நிற்கும் உத்தர ஆதாரக் கம்பம்.
storeyed
a. மாடியுடைய, கட்டிட வகையில் அடுக்குத் தளங்களையுடைய.
storiated
a. சித்திர அணி செய்யப்பட்ட, நுணுக்க விரிவான அணி ஒப்பனைகள் செய்யப்பெற்ற.
storied
-1 a. காவியப்புகழ் வாய்ந்த, வரலாற்றுப்புகழுடைய, பாடுபுகழ் வாய்ந்த, பழங்கதக் குறிப்புக்கள் வரையப்பெற்ற, வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த, பழங்கதையணி ஒப்பனை வாய்ந்த, வரலாற்றணி சிறந்த.
storks-bill
n. நாரையலகு போன்ற காயுடைச் செடிவகை.
storm
n. புயல், சூறாவளி, சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு, எறிபடைகளின் வெறிப்பொழிவு, சீறொலியின் உக்கிரவீச்சு, ஆரவாரப் புயலடிப்பு, வெறியாட்டம், மூர்க்கத் தாக்குதல், அரண்தாக்குப் பிடிப்பு, மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி, (வினை.) புயல் வகையில் குமுறியெழு, மழை வகையில் வாரியடி, பெருவளி வகையில் வீசியடி, புயல்போல் சுழற்றியடி, கடுஞ்சினத்தில் சீறியெழு, வெறியாட்டமாடு, வீறாப்புப் பேசு, ஏசிப்பேசு, உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு, உட்புகைவுறு, மூர்க்கமாகத் தாக்கு, உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று, உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு,
storm-beaten
a. அலைக்கழிக்கப்பட்ட, வாழ்க்கைத் தொல்லைகளுக்கு ஆட்பட்டு நைந்த.
storm-belt
n. புயல் மண்டலம், புயல்கள் வழக்கமாக மிக அடிக்கும் பகுதி.
storm-bird
n. கடற் பறவை வகை.
storm-card
n. புயல் நெறிவிளக்க வரைபடம், புயலின் போது அதன் மைய ஆற்றல் நெறிகள் கணித்துத்தகுநெறி காட்ட உதவும் கடலோடியின் கணிப்பு விளக்க விவர விரை படம்.
storm-centre
n. புயல் மையம், குழப்பக் கருமூலம், நெருக்கடி மையச் செய்தி.
storm-cloud
n. புயல்மேகம், புயல்வரவு முன்னறிவிக்கும் முகிற்கீற்று, பேரிடர் முன்னறிகுறி, இடர் விளைவிக்குஞ் செய்தி.
storm-cone
n. புயற்குறிக்கூம்பு, வன்காற்று வடக்கிலிருந்து அடிப்பதை மேல்நோக்கியும் தெற்கிலிருந்து வருவதைக் கீழ் நோக்கியும் காட்டும் கீலடித்த கித்தான் கூம்புக்குறி.
storm-door
n. வன் புற மிகைக்கதவு, புயற்காலத்துக்கென மிகையாக வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட துணைக்கதவு.
storm-drum
n. பெரும்புயல் எச்சரிக்கைக்குறி, புயற்குறிக் கூம்புடன் கடும்புயல் எச்சரிக்கையாக இணைத்துக் காட்டப் படும் வட்டுருளை அடையாளம்.