English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stop-volley
n. வலைத் தெறியடி, வரிப்பந்தாட்ட வகையில் வலைக்கு நெருங்கிய நிலையில் தடுப்புண்டு மறுபக்கத்தில் விழும் விசைப்பந்தடி.
stop-watch
n. விசையழுத்த மணிப்பொறி, ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம்.
stopcock
n. நெகிழ்வுக்குழாய், மூடவும் திறக்கவும் வல்லகுழாய் அமைவு.
stoppage
n. நிறுத்தம், நிறுத்துதல், தடுப்பு, வேலை இடைமுறிவு, இயந்திர வேலை முறிவு, வேலை முடிவு, பிடிப்புத்தொகை, சம்பளத்தில் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் தொகை.
stopped
a. நிறுத்ததப்பட்ட, அடைக்கப்பட்ட.
stopper
n. நிறுத்துபவர், தடுப்பவர், நிறுத்துவது, தடுப்பது, அடைப்புமூடி, குமிழ்மூடி, கண்ணாடிக் குப்பி மூடி, அள்ளாக்கயிறு, கட்டுத்தும்பு, (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு, அள்ளாக்கயிற்றால் இறுக்கு.
stopper bolt
n. (கப்.) அள்ளாவளையம், அள்ளாக்கயிறு கட்டும் வளையம்.
stopper-knot
n. புரிமூடி அள்ளாக்கயிற்றின் புரிமுறுக்கால் ஏற்பட்ட முனை.
stopping
a. நிறுத்தல், தங்கல், தடுத்தல், பல் இடுக்கடைப்பு, நரம்பு தடவல், (பெ.) நிறுத்தலுக்குரிய, தங்கலக்குரிய, காப்பிற்குரிய.
stopping-brush
n. காடி அரிப்பு வேண்டா இடத்தில் காப்புப் பூச்சிடம் தூரிகை.
stopping-out
n. செதுக்குவேலையில் அரிப்புக் காப்பீடு, (நி-ப) ஒலித்தடைக் காப்பீடு.
stopping-place
n. இடை நிறுத்திடம்.
stopple
n. குப்பியின் மூடியடைப்பு, (வினை.) அடைப்பிட்டு மூடு.
storable
a. குவித்து வைக்கத்தக்க.
storage
n. சரக்குக்குவிப்பு, சரக்குச் சேமிப்பு முறை, சரக்குச் சேமிப்பிடம், பண்டசாலைச்சரக்குச் சேமிப்புக் கட்டணம், மின்வலிச் சேமிப்பு.
storax
n. குங்குலிய வகை,சிலாபுட்பம்.
store
n. சேமிப்புக் குவை, குவியல், பெருந்திரள், பெருவளம், ஏராளம், தொகுவளம், பண்டாரம், களஞ்சியம், கிடங்கு, கொட்டாரம், மண்டி, சரக்குவிற்பனைக் கடை, தனிவிற்பனை நிறுவனம், விற்பனைக் கூடம், திரட்சி, சேம இருப்புக் குவை, பல்பொருள் தருவிப்பரங்கம், வழங்கீட்டரங்கம், (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான, வருங்காலப் பயனீட்டுக்குரிய, கிடங்கினுக்குரிய, உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட, (வினை.) சேர்த்து வை, தொகுத்து வை, இருப்புவளம் திரட்டி வை, குவித்து வை, தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு, வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை, கொட்டாரத்திலிட்டு வை, கொள், அடங்கத்தக்கதாயிரு, கொள்ளும் அளவுடையதாயிரு, கொள்கலமாயிரு, சேகரித்து வைக்கத் தக்கதாயிரு, நிரப்பி வை, செறிவளப்படுத்தி வை, மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.
store-room
n. கிடங்கு, சரக்குச் சேமிப்பறை, அரங்கு, அறைவீடு, வீட்டின் பொருட் சேம அறை.
store-ship
n. கடற்படைத்துறைச் சரக்குகள் கொண்டு செல்லுங் கப்பல், படைத்துறைச் சரக்குதவிக்கப்பல்.
storehouse
n. களஞ்சியம், பண்டகசாலை, சரக்குக் கருவூலம்.