English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
storting, storthing
நார்வே நாட்டு மாமன்றம்.
story
-1 n. கதை, நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், ஆதாரச் செய்தி, ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை, முழுநிலைப் பின்னணி விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விவரம், இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு, எழுத்தாண்மைக்கூறு, பத்திரிக்கைச் செய்தி, கட்டுரை, நொடிக்கதை, உபகதை, இடைநிகழ்ச்சி, துணுக்குரை, அருஞ்சுவை தரும் விளக்கம், கேள்விச்செய்தி, அறிவிப்பு, வாய்மொழிக் கூற்று, சாட்டுரை, புனைவுரை, சார்பு வாய்மொழி, நம்பமுடியாச் செய்தி, பழங்கதை, காலங்கடந்த செய்தி, பலரறி செய்தி, பேர்போன செய்தி, கட்டுக்கதை, பொய், புளுகு, அருங்கதை, புனைகதை.
story-book
n. கதைப்புத்தகம்.
story-making
n. கதைக்கலை.
story-poem
n. காதை, கதைப்பாடல்.
story-teller
n. கதை கூறுவோர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை எழுத்தாளர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர்.
storyy-telling
n. கதைக்கலை.
stot
n. (பே-வ) இள எருது, இளங்காளை.
stoup
n. குடுவை, குடிகலம், இன்தேறல் மேசைக்கலம், தீர்த்தக்கெண்டி.
stout
n. வீரியமிக்க கடுந்தேறல் வகை, (பெ.) தடித்த, முரடான, பருத்த உடலுடைய, கட்டுடல் வாய்ந்த, திடமான, வலிமை வாய்ந்த, வீரமிக்க, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத, துணிவுமிக்க, உரமிக்க, ஊக்கமுள்ள, மனவுறுதி வாய்ந்த, இணங்கிப் போகாத, பிடிவாதமுள்ள.
stout-heartedly
adv. நெஞ்சுரத்துடன், தீரமாக, விடாப் பிடியுடன்.
stout-heartedness
n. நெஞ்சுரமுடைமை, உளவலிமையுடைமை, வீரமுடைமை.
stouthearted
a. நெஞ்சுரமிக்க, வீரமிக்க, உளவலிமை வாய்ந்த.
stoutish
a. தோற்றத்தில் பருத்த, ஓரளவு தடித்த.
stoutly
adv. விடாப்பிடியாய், உறுதியுடன்.
stoutness
n. பருத்த தன்மை, தடிப்பு, விடாப்பிடியுடைமை, உறுதிப்பாடு.
stove
-1 n. கணப்படுப்பு, செயற்கை வெப்ப வீடு, (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய்.
stove-pipe
n. கணப்படுப்புப் புகை செல் குழாய்.
stover
n. தீவனம், மாத்தீனி.