English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stow
v. செம்மிவை, நன்கு செருகி ஒழுங்குபடுத்திவை, வாய்ப்பாகத் திணித்து வை, சேகரித்து வை, (இழி.) விலக்கித் தள்ளு, பழக்கத்துக்கு இடங்கொடாதிரு.
stow-wood
n. செம்மு கட்டை.
stowage
n. தொகுப்பு, தொகுப்பறை, தொகுப்புக் கூலி.
stowaway
n. கட்டணமில்லாக் கரவுப்பயணி, கப்பலிற் கட்டணமில்லாமலே ஏறி ஒளிந்திருப்பவர்.
strabismus
n. மாறு கண் பார்வை, ஓரக்கண்ணாய்ப் பார்த்தல், மாறுகண்.
strabotomy
n. விழிவெட்டறுவை, ஓரக்கண் பார்வை நீக்க விழிமண்டலம் பிளக்கும் கண் அறுவை.
straddle
n. இடப்பு, கால்பரப்பிய நிலை, அகட்டமர்வு, கால் விரித்துட்காரும் நிலை, கவட்டுநடை, கால்பிளந்த நடை, அருவருப்பான நிலை, அருவருப்பான போக்கு, இருவழிப் படர்வு, தொட்டுத்தொடா நிலை, இரண்டுங்கெட்ட நிலை, கவர்வுநிலை, வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை, வரை கவிவுக் குத்தகை, பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை, சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம், (வினை.) இடவு, கால்பரப்பிக்கொண்டிரு, அகட்டித்தமர், கவட்டித்து நட, கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல், இரண்டுங்கெட்ட நிலை குறி, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில், அகலப்பரப்பி வை, பரவலாக வேட்டிடு, முன்பின் கவித்து வேட்டிடு, பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை, வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
strafe
n. பரவல் குண்டுவீச்சு, குண்டுவீச்சுத் தொல்லை, உதிர் வேட்டெறிவு, தாக்குதல், கண்டனம், கடிந்துரை, அடி, உதை, வசவு, (வினை.) பரவலாகக் குண்டுவீச்சு, உதிர் வேட்டிடு, குண்டு வீசித் தொல்லை கொடு, தாக்கு, கண்டி, கடிந்துரை.
straggle
v. பிரிந்து செல், வழவிலகிச் செல், சிதறிச் செல், குறிக்கோளின்றித் திரி, இங்குமங்குமாகச் செல், கட்டுக்குலைவுறு, இங்கொன்றுமங்கொன்றுமாயிரு, இடையிடையே நிகழ், செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
straggler
n. அலைந்து திரிபவர், திட்டமின்றிச் செல்பவர், வழி விலகிச் செல்பவர், பிரிந்து செல்பவர், கலைந்து செல்பவர்.
straggling
n. அலைந்து திரிதல், (பெ.) அலைந்து திரிகிற, திட்டமினறிச் செல்கிற, வளைந்து வளைந்து செல்கிற, சிதறலான, இங்கொன்றும் அங்கொன்றுமான.
stragglingly
adv. அலைவுதிரிவாக, வளையவளைய, இங்கொன்றும் அங்கொன்றமாக, சிதறலாக, படரலாக.
straight
n. நேர்நிலை, ஒட்டப்பந்தய நேர்நெறி, ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி, ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம், நேர்வான் நெறி, நேர்வான் நெறிப்பகுதி, சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை, நெறி நேர்மை, நன்னடத்தை, (பெ.) நேரான, வளையாத, கோணாத, ஒரே திசையில் செல்கிற, திசை திரும்பாத, நெறி விலகாத, குறி நேரான, குறி வகையில் இலக்குத் தவறாத, அடி வகையில் குறி தவறாத, மூலத்திலிருந்து நேர்வரவான, சரியான, நேர்மட்டமான, செவ்வான, செவ்விசைவான, சரிசமமான, நேரடியான, சுற்றிவளைக்காத, உடனடியான, நேர்முகமான, மறைமுகமல்லாத, சரி ஒழுங்கான, ஒழுங்கு வழாத, விதிமுறை பிசகாத, நேர்மை வாய்ந்த, கரவடமற்ற, சூதுவாதற்ற, நடத்தைவகையில் நெறி திறம்பாத, திறந்த மனப்பான்மையுள்ள, நேர்நிமிர்வான, சரியாத, வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடப்பற்ற, மட்டுமழுப்பற்ற, தருக்குமுறை பிறழாத, உணர்ச்சிவசப்பட்டு வழுவாத, போட்டி வல் நேர்மை தவறாத, மாறுதலற்ற, எளிய, சிக்கலற்ற, கலப்பற்ற, நீராளமாக்கப்படாத, தேறல் வகையில் கலப்பட மல்லாத, சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட, (வினை.) நேராக்கு, (வினையடை.) நேர்கோடாக, நேர்வரிசையாக, வளையாமல், கோணாமல், வளைந்து வளைந்து செல்லாமல், குறுக்கு வெட்டாக, ஒழுங்காக, நேரடியாக, உடனடியாக, சரியான திசையில், நேராக, சரியாக, தயக்கமில்லாமல், குறிநோக்கி நேரே, நிமிர்வாக, நேர்மட்டமாக, மட்டு மழுப்பலின்றி, நேர்மையுடன், கரவடமின்றி, நெடுகிலும், முழுதுங்கடந்து.
straight forward
a. நேர்மையுள்ள, கபடமில்லாத, ஒளிவுமறைவற்ற, செயல் வகையில் சிக்கலற்ற, குழப்பமற்ற.
straight-cut
a. புகையிலை வகையில் பட்டிழை போன்று நெடுகலான துய்களாக வெட்டப்பட்ட.
straight-edge
n. நேர்நுட்பக்கோல், ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒருபுறம் கொண்ட அளவுகோல்.
straight-eight
n. எண்வட்டு உந்துகலம், வரிசையாக எட்டு நீளுருளைகளைக் கொண்ட மோட்டார் வண்டி.
straighten,
v. நேராக்கு, வளைவை நிமிர்த்து, நேராகு.
straightforwardly
adv. நேராக, ஒழுங்காக, கபடமின்றி, ஒளிவுமறைவின்றி, சிக்கலின்றி.
straightforwardness
n. ஒளிவுமறைவின்மை, கடமை-செயல் முதலியவற்றில் சிக்கலின்மை.