English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
strangle hold
n. சாப்பிடி, வர்மப்பிடி, அரசியல் துறையில் தனியார் ஆதிக்கப்பிடி, செல்வத்துறையில் தனிமனிதர் ஆக்க அழிவுக் கைப்பிடி.
strangle-weed
n. ஒட்டுயிர்ச்செடி வகை.
strangles
n. pl. குதிரை-கழுதை ஆகியவற்றின் நீர்க்கோப்புத் தொற்றுநோய்.
strangulate
v. கழுத்தை நெரித்துக்கொல், அழுத்திஇயக்கந்தடு, (மரு.) அழுத்தமூலம் குருதியோட்டந் தடு.
strangulated
a. நெரிவுற்ற, வழி இடுங்கிய.
strangulation
n. அமுக்கம்,அழுத்தத்தடை.
strangury
n. நீர்க்கடுப்பு நோய், சூடுபிடிப்புக் கோளாறு, கட்டுக்கோளாறு, கட்டுப்போடுவதால் செடிகளில் உண்டாகும் நோய்.
strap
n. வார், தோல் பட்டை, உலோகப்பட்டை, இணைப்புக்கீலின் தகடு, (தாவ.) சிறுமலர் வகைகளின் நாக்கு வடிவப் பகுதி, (வினை.) வாரினாற் கட்டு, பட்டையினால் இணை, கசைவாரால் அடி, தோல்வாரில் கத்தி தீட்ட, (மரு.) அறுவைக்காயத்தின் பகுதிகளை ஒட்டுப்பசை வாரால் இணைத்துக்கட்டு.
strap-hanger
n. வார்தொங்கலர், உந்துவண்டி-புகைவண்டி ஆகியவற்றில் நின்று செல்லும் பயணர்.
strap-laid
a. கயிற்று முடைவான, பட்டை முடைவான.
strap-wort
n. களைச் செடி வகை.
strapless
a. உடை வகையில் தோட்பகுதியற்ற.
strappado
n. முற்கால வார்த்தொங்கீட்டுத் தண்டனை, (வினை.) வார்த்தொங்கீட்டுத் தண்டனையால் சித்திரவதைக்கு ஆளாக்கு.
strapping
n. கசையடி, வாரால் அடித்தல், வார்த்தொழில் மூலப்பொருள், வார்க்கட்டை, பட்டையினால் இணைப்பு, கட்டுறுதிப் பட்டை, (பெ.) தாட்டியான, நெட்டுறுதியான, கட்டுறுதியுடைய.
strapwork
n. வார்முடைவுப் போலி அணி ஒப்பனை.
strass
n. மணிக்கற் களி, செயற்கை மணிக்கற்கள் செய்ய உதவும் பசை.
strata
n. pl. அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம்.
stratagem
n. சூழ்ச்சித்திட்டம், தந்திரம்.